நீடிய யுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அய்யாவழியின் புராண வரலாற்றின்படியான எட்டு யுகங்களில் முதல் யுகம் நீடிய யுகமாகும். இந்த யுகத்தில் உலகில் இயக்கம் நடக்கும் பொருட்டு மும்மூர்த்திகளும் கயிலையில் வேள்வி வளர்க்க, அதில் குறோணி என்ற கொடிய அசுரன் தோன்றினான். இவன் நாலு கோடி முழம் உயரமும் அண்டம் நிறையும் அகலமும் கொண்டவனாயிருந்தான். இவனின் முகம் முதுகுபுறத்தில் இருந்தது. கால், கை, கண், செவிகள், கோடிக்கணக்கில் இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீடிய_யுகம்&oldid=2609025" இருந்து மீள்விக்கப்பட்டது