உள்ளடக்கத்துக்குச் செல்

நீடாமங்கலம் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு லெட்சுமி நாராயணபெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவிடம்:தெற்குமடவிளாகம், நீடாமங்கலம், நீடாமங்கலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மன்னார்குடி
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீ லெட்சுமிநாராயண பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:அட்சயதிருதியை, வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

நீடாமங்கலம் லெட்சுமி நாராயணபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் ஸ்ரீ லெட்சுமிநாராயண பெருமாள் சன்னதியும், ஆண்டாள், செங்கமலதாயார், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் அட்சயதிருதியை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.