நிஷா மொஹோடா
நிஷா மொஹோடா | |
---|---|
நாடு | இந்தியா |
பிறப்பு13 அக்டோபர் 1980
ஹின்கன்காட், இந்தியாபட்டம்சர்வதேச மாஸ்டர் (IM)
உச்சத் தரவுகோள்2416 ( அக்டோபர்2007)நிஷா மொஹோடா (பிறப்பு: அக்டோபர் 13, 1980, ஹிங்காகாட் )[1] சர்வதேச மாஸ்டர் (IM) மற்றும் பெண் கிராண்ட்மாஸ்டர் (WGM) ஆகிய FIDE பட்டங்களை பெற்ற ஒரு இந்திய செஸ் வீரர் ஆவார். இவர்,மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர்.1995ஆம் ஆண்டு ஏப்ரலில் 14 வயது, 6 மாதங்கள் மற்றும் 13 நாட்களில் பெண் சர்வதேச மாஸ்டர் (WIM) என்ற பட்டத்தை மிக இளவயதில் பெற்றார். 1996ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவின் பிரதம மந்திரி எச்.டி. தேவ் கவுடா, இப்பட்டத்தை பெற்றதற்காக நிஷாமொஹோடாவிற்கு ரொக்கப் பரிசு வழங்கினார். நிஷாவின் பெண் சர்வதேச மாஸ்டர் என்ற இச்சாதனை 1999ஆம் ஆண்டு கொனேரு ஹம்பியால் முறியடிக்கப்பட்டது.
2001 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் நிஷா போட்டியிட்டார். 2005 ஆம் ஆண்டில் நிஷா மொஹொடா மகளிர் இந்திய செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றார். [2]
2004, 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மகளிர் ஒலிம்பிக் சதுரங்க சாம்பியன்ஷிப், 2013ல் மகளிர் உலக குழு சதுரங்க சாம்பியன்ஷிப், 2003, 2005, 2008, 2009, [3] மற்றும் 2010ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் இந்திய தேசிய அணி சார்பாக நிஷா மொஹோடா போட்டியிட்டார்.
பிரித்தானிய கிராண்ட் மாஸ்டர் நைகல் ஷார்டின் கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில், மொஹோட்டா பெண்கள் சம உரிமை சார்பாகவும், சதுரங்க விளையாட்டில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களின் சார்பாகவும் பேசியுள்ளார். [4] [5]