நிவேதிதா லூயிஸ்
நிவேதிதா லூயிஸ் | |
|---|---|
| பிறப்பு | 5 சூலை 1978 |
| தொழில் | எழுத்தாளர், பெண்ணிய வரலாற்றாளர், சமூக செயற்பாட்டாளர் |
| தேசியம் | இந்தியர் |
| கல்வி | முதுகலை வணிக மேலாண்மை |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | லாட்லி தேசிய விருது 2024 |
| துணைவர் | லூயிஸ் இருதயதாசன் |
| இணையதளம் | |
| https://herstories.xyz/ | |
நிவேதிதா லூயிஸ் (Nivedita Louis பிறப்பு: 5 சூலை 1978), ஒரு தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர், பெண்ணிய வரலாற்றாளர், சமூக செயற்பாட்டாளர் ஆவார்.[1] இவர் 'ஹெர் ஸ்டோரிஸ்' பெண்ணிய அமைப்பின் இணை நிறுவனர் ஆவார்.[2]
கல்வியும் தொடக்க வாழ்க்கையும்
[தொகு]நிவேதிதா பள்ளிப் படிப்பை அம்பாசமுத்திரத்திலும் சென்னையிலும் கற்றார். தென்னக இரயில்வேயில் சில ஆண்டுகள் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
எழுத்துப் பயணம்
[தொகு]நிவேதிதா எழுதிய முதல் பெண்கள் எனும் கட்டுரைத் தொடர் அவள் விகடன் இதழில் வெளியானது.[3] இதனைத் தொகுத்து மைத்ரி பதிப்பகம் 2019 ஆம் ஆண்டில் நூலாக வெளியிட்டது.[4]
அதே ஆண்டு, கிழக்கு பதிப்பகம் வாயிலாக நிவேதிதாவின் ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை என்ற நூல் வெளியானது.[5] இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு எஸ் ஆர் எம் தமிழ்ப் பேராயம் வழங்கும் ஜி. யு. போப் மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றது. பின்னர், வடசென்னையில் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்து, வடசென்னை: வரலாறும் வாழ்வியலும் என்ற நூலை எழுதினார்.[6] இந்த நூல் 2022 ஆம் ஆண்டிற்கான எஸ் ஆர் எம் தமிழ் பேராயம் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதைப் பெற்றது.[7].
நிவேதிதா இரண்டு ஆண்டுகள் களப்பணி செய்து, அறியப்படாத கிறிஸ்தவம் என்னும் நூலினை 2022 ஆம் ஆண்டு வெளியிட்டார்[8]. இதனைத் தொடர்ந்து அம்மாக்கண்ணுவுக்கு நீலனை பிடிக்காது, கலகப் புத்தகம், பாதை அமைத்தவர்கள், 1938 முதல் மொழிப்போரில் பெண்கள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஓராண்டு கள ஆய்வு மேற்கொண்டு கிறிஸ்தவத்தில் ஜாதி என்னும் நூலினை 2023 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதே ஆண்டு இளங்கோவன் ராஜசேகரன் எழுதிய சாதியின் பெயரால் என்னும் நூலினை மருதனுடன் இணைந்து ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தார்.[9] 2024 ஆம் ஆண்டில் ராஜம்மாள் என்ற சிறார் இலக்கிய நூலையும் 'பெயரற்றவர்களின் குரல்' என்ற தொகுப்பு நூலையும் வெளியிட்டார்.
பண்பாட்டு நடைப்பயணங்கள்
[தொகு]நிவேதிதா சென்னையில் மரபு நடைகள் குறித்த பண்பாட்டு உரைகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறார். சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இயல் இசை அருங்காட்சியகக் கண்காட்சியை வடிவமைத்துத் தந்தார்.[10] இவரின் மரபு நடைகள், ஊர்தி உலாக்கள் சென்னையின் பண்பாட்டையும் வரலாற்றையும் மக்களிடம் அறிமுகப்படுத்த உதவுகின்றன.[11][12] 2023 ஆம் ஆண்டு கோத்தே இன்ஸ்டிட்டியூட்டுடன் இணைந்து வண்ணாரப்பேட்டை மரபு நடையை வடிவமைத்து நடத்தினார்.[13]. பூந்தமல்லி, ராயபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் மரபு நடை நடத்தியுள்ளார்.[14]
பெண்ணியச் செயல்பாடுகள்
[தொகு]ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்துடன் (UNFPA) இணைந்து, பாப்புலேசன் பர்ஸ்ட் அமைப்பு வழங்கும் பாலின உணர்திறனுக்கான தேசிய லாட்லி ஊடக விருதை 2024ஆம் ஆண்டு பெற்றார்.[15]. அக்னி பிரதீப், மரக்கா ஆகிய இருவருடன் செய்த திருநர் குறித்த உரையாடலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. அதே ஆண்டில் இந்த உரையாடலுக்காக லாட்லி வட்டார விருதும் பெற்றார். 2021ஆம் ஆண்டு செம்மஞ்சேரி பெண்களுடன் நடத்திய ஹெர் ஸ்டோரிஸ் உரையாடலுக்காக லாட்லி வட்டார விருது வென்றார்[16].
எழுதியுள்ள நூல்கள்
[தொகு]- முதல் பெண்கள்
- ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை
- மகிழ்ச்சியின் தேசம்
- சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட கதை
- வடசென்னை – வரலாறும் வாழ்வியலும்
- அறியப்படாத கிறிஸ்தவம் (இரண்டு பகுதிகள்)
- அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது
- கலகப் புத்தகம்
- பாதை அமைத்தவர்கள்
- 1938: முதல் மொழிப் போரில் பெண்கள்
- கிறிஸ்தவத்தில் ஜாதி
- இராஜம்மாள்
- பெயரற்றவர்களின் குரல்
விருதுகள்
[தொகு]- லாட்லி தேசிய விருது 2024[15]
- லாட்லி வட்டார விருது 2021[16]
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வழங்கும் தோழர் கே.முத்தையா விருது
- புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது
மேற்கோள்கள்
[தொகு]- ↑ migrator (2018-07-11). "'Wonder women of Madras should be given more credit'". www.dtnext.in (in ஆங்கிலம்). Retrieved 2025-03-27.
- ↑ "Celebrating The Wonder Women Of Madras Who Fought Patriarchy". femina.in (in ஆங்கிலம்). Femina.
- ↑ நிவேதிதாலூயிஸ்,மேடி (2020-07-21). "முதல் பெண்கள்: அதிசய ஆனி... இந்தியாவின் முதல் பெண் டாக்டர்!". vikatan.com. Retrieved 2025-03-27.
- ↑ "முதல் பெண்கள்". Goodreads (in ஆங்கிலம்).
- ↑ "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை / Adichanallur Mudhal Kee…". Goodreads (in ஆங்கிலம்). Retrieved 2025-03-27.
- ↑ லூயிஸ், நிவேதிதா (2021). வடசென்னை : வரலாறும் வாழ்வியலும் (1 st ed.). கிழக்கு பதிப்பகம்.
- ↑ PuthiyathalaimuraiTV (2022-11-23), 🔴நேரலை: SRM தமிழ்ப்பேராய விருதுகள் விழா 2022 | SRM | TamilAwards, retrieved 2025-03-27
- ↑ லூயிஸ் நிவேதிதா (2022). அறியப்படாத கிறிஸ்தவம் (1st ed.). கிழக்கு பதிப்பகம். ISBN 9789390958054.
- ↑ ராஜசேகரன், இளங்கோவன் (2024). சாதியின் பெயரால் - ஆணவக் கொலைகள் பதிவு (1 ed.). கிழக்கு பதிப்பகம்.
- ↑ "A peek into Chennai’s Iyal Isai Museum". The Hindu.
- ↑ https://timesofindia.indiatimes.com/life-style/spotlight/a-trail-around-washermanpet/articleshow/103509088.cms
- ↑ "Women changemakers of Madra". The hindu.
- ↑ "trail around washermanpet". Times of India.
- ↑ Shekar, Anjana (2018-04-29). "Exploring Poonamallee: Bringing alive the fascinating history of this TN town". The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2025-03-27.
- ↑ 15.0 15.1 "salmaags brochure 2024" (PDF). populationfirst.org.
- ↑ 16.0 16.1 "Lmaags2-2021 Final" (PDF). populationfirst.org.
