நிவேதிதா பாசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிவேதிதா பாசின்
பிறப்பு1963
தேசியம்இந்தியர்
பணிபயணிகள் விமானி
வாழ்க்கைத்
துணை
கேப்டன் ரோஹித் பாசின்

நிவேதிதா பாசின் (பிறப்பு 1963) இந்தியாவின் தில்லியை சேர்ந்த பயணிகள் விமான ஓட்டுனராவார்.இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக இவர், பயணிகள் விமான போக்குவரத்து வரலாற்றில் முதல் முறையாக 1990 ஆம் ஆண்டில், ஜனவரி 1 அன்று விமானத்தை இயக்கியதன் மூலம், இருபத்தியாறு வயதில் பயணிகள் விமானத்தை இயக்கிய இளம் பெண் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார். இவ்விமான சேவை பம்பாய் - ஔரங்காபாத் - உதய்பூர் வழித்தடங்களில் IC-492 என்ற விமானத்தை இயக்கி, நிவேதிதா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

சாதனைகள்[தொகு]

நிவேதிதா, 1984 ஆம் ஆண்டில் விமானியாக இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார். அதுமுதல் பெண் விமானியாக பல்வேறு சாதனைகளை முதலாவதாக நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார்.  [1]

  • 1985 ஆம் ஆண்டு நவம்பரில் கல்கத்தா - சில்சார் வழித்தடத்தில் முதல் முழுப் பெண்களை மட்டுமே கொண்ட குழுவினருடன் இயக்கப்பட்ட விமானமான ஃபோக்கர் ஃப்ரெண்ட்ஷிப் எஃப்-27ல் கேப்டன் சௌதாமினி தேஷ்முக்குடன் துணை விமானியாக இருந்துள்ளார்.
  • 1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மும்பை - கோவா வழித்தடத்தில் அனைத்தும்  பெண் பணியாளர்களைக் கொண்டே இயக்கப்பட்ட போயிங் முதல் பெண் விமானக்குழுவை உருவாக்கியுள்ளார்.
  • ஜனவரி 1990 ஆம் ஆண்டு, தனது 26 வயதில் போயிங் விமானத்தில் விமானத்தலைவரான முதல் இளம் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.[2][3]
  • ஹைதராபாத் - விசாகப்பட்டினம் வழித்தடத்தில் விமானத்தலைவராக போயிங் விமானத்தின் அனைத்து பெண் குழுவினரையும் வழிநடத்தியுள்ளார். மேலும் ஏர்பஸ் ஏ300 விமானத்தில் தலைமை விமானியாக இருந்து 8,100 மணி நேரத்திற்கும் அதிகமான விமானப் பயண அனுபவத்துடன், 8 மார்ச் 1999 அன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லி - காத்மாண்டு வழித்தடத்தில் ஏர்பஸ் A300 பயணிகள் விமானத்தை ஓட்டியுள்ளார்.
  • ஏர்பஸ் ஏ300 பயணிகள் விமானத்தில் இந்தியாவின் முதல் பெண் பரிசோதனை விமானி ஆனார். நிர்ணயிக்கப்பட்ட சோதனைகள் மற்றும் தேவையான பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்ததற்காக நிவேதிதாவுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பரிசோதனை விமானியாக உரிமம் மற்றும் ஒப்புதல் அளித்துள்ளது. இது செயல்பாட்டு அறிவுக்கான வகுப்பறை மற்றும் களப் பயிற்சி, பறக்கும் திறமைக்கான உருவக மாதிரிப் பயிற்சி, தரையிறங்க/வானேற செய்வதற்கான விமானப் பயிற்சி மற்றும் லைன் ஃப்ளையிங் ஆகியவற்றை உள்ளடக்கிய தன்மைகளை கொண்ட ஒப்புதலாகும்
  • நிவேதிதா பாசின், மிகப்பெரும் பயணிகள் விமானமான 787 ட்ரீம்லைனர் விமானத்தை, 19 செப்டம்பர் 2012 அன்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நிவேதிதா, நவம்பர் 2020 ஆம் ஆண்டு, விமான பாதுகாப்பு நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு பெற்றார்.

இவரது கணவர் ரோஹித் பாசின் மற்றும் மகள் நிஹாரிகா பாசின் இருவரும் இண்டிகோ ஏர்லைன்ஸில் பணியாற்றியுள்ளனர், இவரது மகன் கேப்டன் ரோஹன் பாசின் போயிங் 777 விமானத்தில் தலைமை விமானியாக ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்..

மேற்கோள்கள்[தொகு]

  1. "Home - International Society of Women Airline Pilots". www.iswap.org. பார்க்கப்பட்ட நாள் 24 June 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Savitha Gautam (15 March 2006). "Sky isn't the limit!". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 1 அக்டோபர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071001045352/http://www.hindu.com/mp/2006/03/15/stories/2006031500330800.htm. பார்த்த நாள்: September 22, 2006. 
  3. "Captain Milestone". இந்தியா டுடே. Archived from the original on October 25, 2006. பார்க்கப்பட்ட நாள் September 22, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவேதிதா_பாசின்&oldid=3743453" இலிருந்து மீள்விக்கப்பட்டது