நிவேதிதா அர்ஜுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிவேதிதா அர்ஜுன்
பிறப்புநிவேதிதா
கர்நாடகம், பெங்களூர்
மற்ற பெயர்கள்ஆஷா ராணி
பணிநடிகை, தயாரிப்பாளர், நடனக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1986; 1992-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
அர்ஜுன் (தி. 1988)

நிவேதிதா அர்ஜுன் (Niveditha Arjun) என்பவர் ஒரு இந்திய நடிகை, தயாரிப்பாளர், நடனக் கலைஞர் ஆவார். இவர் எம். எஸ். ராஜசேகரின் கன்னட திரைப்படமான ரத சப்தமி (1986) படத்தில் ஆஷா ராணி என்ற பெயரில் நடிகையாக அறிமுகமானார் பிறகு நடனக் கலைஞராக தனது பணியைத் தொடர்ந்தார். மேலும் சிறீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் பட நிறுவனத்தின் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். இவர் நடிகர் ராஜேஷின் மகளாவார். நடிகர் அர்ஜுனை மணந்தார். மேலும் இவர் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனின் தாயார் ஆவார். [1] [2]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

கன்னட திரைப்பட நடிகர் ராஜேஷின் மகளான நிவேதிதா நடிகர் அர்ஜுனை மணந்தார். இந்த இணையருக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடிகையாக உள்ளார், அஞ்சனா அர்ஜுன் நியூயார்க்கில் பேஷன் டிசைனராக பணிபுரிகிறார். [3] [4] [5]

தொழில்[தொகு]

ஆஷா ராணி என்ற திரைப் பெயருடன் கன்னட திரையுலகில் நுழைந்த நிவேதிதா, முதலில் ரத சப்தமி (1986) படத்தில் நடித்தார். எம். எஸ். ராஜசேகர் இயக்கிய படத்தில் இவர் சிவ ராஜ்குமாருடன் இணைந்து நடித்தார். மேலும் அந்த படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றது. அர்ஜுனுடனான திருமணத்திற்குப் பிறகு, நிவேதிதா தனது கலைப்பணியை விட்டுவிட்டு ஒரு குடும்பத் தலைவியாக சென்னைக்கு இடம்பெயர்ந்தார். அண்மைய ஆண்டுகளில், இவர் அர்ஜுனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவன ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனலில் பணியாற்றியுள்ளார், மேலும் தயாரிப்பாளராக பெருமை பெற்றார்.[சான்று தேவை]

திரைப்பட நடிப்பிலிருந்து விலகி, நிவேதிதா சிலகாலம் பாரம்பரிய நடனக் கலைஞராக மேடைகளில் ஆடியுள்ளார். [6]

திரைப்படவியல்[தொகு]

நடிகை
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1986 ரத சப்தமி தீபா கன்னடம்


குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவேதிதா_அர்ஜுன்&oldid=3318568" இருந்து மீள்விக்கப்பட்டது