உள்ளடக்கத்துக்குச் செல்

நிவாபிளெக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிவாபிளெக்சு (Nivaflex) என்பது கடிகாரத் தயாரிப்பில் முக்கியமான ஒரு ஆக்டா மாறுபாட்டு உலோகக் கலவையாகும். இது முதன்மையாக முதன்மைக்கம்பிச் சுருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] 1957 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த உலோகவியலாளரான ரெய்ன்கார்ட்டு சிட்ராமன் என்பவரால் வர்த்தக முத்திரையாகப் பதிவு செய்யப்பட்டது.[2][3] நிவாபிளெக்சு கலப்புலோகம் முற்றிலும் காந்தமற்றது. வெப்ப விரிவாக்கத்தின் மிகக் குறைந்த குணகத்தைக் காட்டுகிறது.[4] இதன் இயைபாக 45% கோபால்ட்டு, 21% நிக்கல், 18% குரோமியம், 5% இரும்பு, 4% டங்சுடன், 4% மாலிப்டினம், 1% தைட்டானியம் மற்றும் 0.2% பெரிலியம் ஆகியவை கலந்துள்ளன. கார்பன் உள்ளடக்கம் உலோகக் கலவையின் எடையில் 0.1 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிவாபிளெக்சு&oldid=4597956" இலிருந்து மீள்விக்கப்பட்டது