நிழல்வெளிக் கதைகள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிழல்வெளிக்கதைகள் ஜெயமோகன் எழுதிய [[திகில் புனைவு|அமானுடக் கதைகளின்] தொகுப்பு. இதை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

உள்ளடக்கம்[தொகு]

இத்தொகுப்பில் தம்பி போன்ற கதைகள் உளவியல் பகுப்பாய்வுக்கோணத்தில் உள்ளன. யக்‌ஷிக்கதைகளின் சாயலில் ஏழுநிலைப்பந்தல் போன்ற கதைகள் உள்ளன.

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் மனிதகுலத்தின் ஆரம்பகாலம் முதல் உள்ளன. இவை இயற்கையின் மர்மங்கலையும் மனித ஆழ்மனத்தின் மர்மங்களையும் பற்றித்தான் பேசுகின்றன. மேலும் இவை முக்கியமான குறியீடுகளை முன்வைக்கின்றன. பேய்க்கதைகளை அதீத உளவியல்கதைகளாகவே அணுகவேண்டும் என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார். அந்த கோணத்தில் எழுதப்பட்ட கதைகள் இவை.