நில அதிர்வு ஆய்வு நிறுவனம்

ஆள்கூறுகள்: 23°09′34.085″N 72°40′4.606″E / 23.15946806°N 72.66794611°E / 23.15946806; 72.66794611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நில அதிர்வு ஆய்வு நிறுவனம்
Institute of Seismological Research
Established2003
பொது இயக்குநர்முனைவர் சுமர் சோப்ரா
Locationகாந்திநகர், குசராத்து, இந்தியா
Coordinates23°09′34.085″N 72°40′4.606″E / 23.15946806°N 72.66794611°E / 23.15946806; 72.66794611
Websiteisr.gujarat.gov.in

நில அதிர்வு ஆய்வு நிறுவனம் (Institute of Seismological Research) இந்தியாவில் குசராத்து மாநிலம், காந்திநகரில் அமைந்துள்ளது. பூகம்ப பொறியியல் மற்றும் ஆய்வு மையமான இது 2001 குசராத்து நிலநடுக்கத்தைத் 2003-ஆம் ஆண்டு குசராத் அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழினுட்பத் துறையால் நிறுவப்பட்டது.

வரலாறு[தொகு]

2003 ஆம் ஆண்டில், முனைவர் ஜே.ஜி. நேகி நில அதிர்வு ஆய்வு நிறுவனத்திற்கான கட்டமைப்பை உருவாக்கி, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் இம்மையத்தை நிறுவினார். அவருக்கும் மாநில அரசுக்கும் இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக 2004 ஆம் ஆண்டு இவர் பதவி விலகினார். [1] பின்னர், பேராசிரியர். நவீன்சந்திர என். சிறீவசுதவா குசராத் அரசால் இந்த நிறுவனத்தை வழிநடத்த நியமிக்கப்பட்டார். முறையான ஆராய்ச்சி நடவடிக்கைகள் 2006 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.

குசராத்தின் மேற்கு மாநிலத்தில் இந்நிறுவனம் 22 அகன்றபட்டை நில அதிர்வு வரைபட நிலையங்களையும் 40 வலிமையான நில அதிர்வு முடுக்கமானி துணை-வலையமைப்பை வரிசைப்படுத்தவும் பராமரிக்கவும் செய்கிறது. [2] துணை-வலையமைப்பு என்பது இந்திய தேசிய வல்லியக்க கருவிகள் வலைப்பின்னல் எனப்படும் பெரிய வலைப்பின்னலின் ஒரு பகுதியாகும், இது ரூர்க்கி இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் பூகம்ப பொறியியல் துறையால் இயக்கப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]