நிலோபர் சாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலோபர் சாகி (Nilofar Sakhi) ஆப்கானித்தானின் அமைதி, மனித உரிமைகள், பெண்களின் உரிமைகள் செயற்பாட்டாளர் ஆவார். இவர் ஆப்கானித்தானின் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைமைருமாவார். இவர் நாட்டின் திறந்தவெளி சமுதாய அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநராகவும் உள்ளார். அவர் ஆப்கானித்தானின் ஹெறாத் நகரத்திலுள்ள முதல் பெண்கள் அரசு சார்பற்ற அமைப்பான 'பெண்கள் செயல்பாடுகள் மற்றும் சமூக சேவைகள் சங்கத்தின்' (WASSA) நிறுவனரும், முன்னாள் நிர்வாக இயக்குனரும் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்[தொகு]

நிலோபர் சாகி, யோர்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். யான்சு அப்கின்சு மேம்பாட்டுப் பள்ளியில் சர்வதேச பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும், கிழக்கு மென்னோனைட் பல்கலைக்கழகத்தில் மோதல் மாற்றமும் ,ம் அமைதியை ஏற்படுத்துதலும் என்ற பிரிவில் பட்டமும் பெற்றார். மேலும், இவர் அரசியல் அறிவியலில் இளங்கலை பட்டமும் பெற்றார். இவர் ஒரு புல்பிரைட் அறிஞர் (2007) ஆவார்.

தொழில்[தொகு]

இவர், வளர்ச்சித் துறையில் ஒரு அறிஞர்-பயிற்சியாளராவார். இவர் யோர்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் இருக்கிறார். ஒரு அரசியல் கல்வி அதிகாரியாக தனது பணியை முதலில் பாக்கித்தானின் தேசிய அரசு சாரா அமைப்பான அவுரத் அறக்கட்டளையில் தொடங்கினார். ஆப்கானித்தானின் ஹெறாத்தில் முதல் மகளிர் அரசு சாரா அமைப்பு 2002 இல் நிறுவப்பட்டது. இவர் தேசிய அரசு சார்பற்ற அமைப்பான 'பெண்கள் செயல்பாடுகள் மற்றும் சமூக சேவைகள் சங்கத்தின்' நிறுவனரும், முன்னாள் நிர்வாக இயக்குனரும் ஆவார். இவர், 2008இல் அந்த அமைப்பின் மோதல் பகுப்பாய்வு மற்றும் தீர்வு மையத்தை நிறுவினார். மேலும் அதன் தலைவராகவும் இருக்கிறார். [1] இவர், ஆப்கானித்தானின் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராக இருந்தார். தற்போது ஆப்கானித்தானின் திறந்தவெளி சமுதாயத்தின் முன்னாள் இயக்குநராகவும் உள்ளார்.[2] இதற்கு முன்பு, ஆப்கானித்தானிலுள்ள திறந்தவெளி சமுதாய நிறுவனத்தில் சட்டம், நிலைமாறு நீதி, மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் பற்றிய மூத்த ஆலோசகராக இருந்தார். 'சகிப்புத்தன்மை கல்விக்கான சர்வதேச மையம்', 2010இல் 'ஆசியா 21 இளம் தலைவர்கள் முன்முயற்சி' ஆகிய இரண்டிலும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஜனநாயகத்திற்கான தேசிய அரசு சாரா அமைப்பில் பார்வையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆப்கானித்தானிலுள்ள 'அமைதிக்கான பாதைகள்' என்ற சர்வதேச வழிநடத்தல் குழுவிலும் உள்ளார்.[3] [4]

ஆப்கானிஸ்தான் பெண்கள் பொருளாதார மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் மூலம் இவரது பெண்களின் உரிமைகளை ஊக்குவிக்கும் பணிக்காக ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான லாரா புஷ் மூலம் பாராட்டப்பட்டார். இந்த நிறுவனம் லாரா புஷ் நூலகம் மற்றும் வள மையத்தையும் கொண்டுள்ளது. மேலும், வணிகம் மற்றும் நிலைத்தன்மை நடவடிக்கைகளுக்கான அமெரிக்க பாதுகாப்புத் துறையின் 5 மில்லியன் டாலர் மானியத்தால் நிதியளிக்கப்பட்டது.[5] ஆப்கானித்தானில் வர்த்தகத்திலும், அரசாங்கத்தில் பெண்களின் உரிமைகளையும், வாய்ப்புகளையும் ஊக்குவிக்க தேவையான கருவிகளையும், வளங்களையும் வழங்குவதில் மையம் கவனம் செலுத்துகிறது.[6] அந்த அமைப்புடன் இவர் இருந்த காலத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி[7] உட்பட பல முக்கிய நபர்களை சந்தித்துள்ளார். பெண்களின் உரிமைகள் மற்றும் அமைதியான பொருளாதார, அரசியல் மாற்றங்களை உள்ளடக்கிய பொதுக் கொள்கைகளை மேம்படுத்துவதற்காக தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் வாதிடுவதில் இவரது பணி பெரிதும் கவனம் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Advisory Board". 8 ஆகஸ்ட் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 September 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Nilofar Sakhi: Justice and Democracy in Afghanistan". 2 பிப்ரவரி 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 September 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Nilofar Sakhi". 5 பிப்ரவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 September 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. "Asia 21 Fellows, Class of 2010". 2 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. Van Wie, Sara (5 June 2013). "Laura Bush Resource Center and Library Opens in Kabul". 2 September 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. "November luncheon features Afghan women's rights activists". 30 அக்டோபர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 September 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. "Afghan Women Help Drive Resurgent Economy". 2 September 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலோபர்_சாகி&oldid=3359645" இருந்து மீள்விக்கப்பட்டது