நிலை வாழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலை வாழ்வு[தொகு][தொகு]

நிலை வாழ்வு[தொகு][தொகு]

நிலைவாழ்வு என்பது நற்கருனை வாழ்வை நமக்குத் தருவது. அதுவும் நிலையான நிம்மதியான நிறைவான வாழ்வைத் தருவது. 'என்றும் வாழ்வர்', 'நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்', நற்கருணையை முன்னிறுத்திச்; சொல்லப்பட்ட இத்தகைய வார்த்தைகள் நிலைவாழ்வின் சிறப்பையும் தேவையையும் உறுதிசெய்கிறது.

நிலைவாழ்வின் முழு ஆற்றலையும் பெற்றிட:[தொகு][தொகு]

  • நம்பிக்கை வேண்டும்

இயேசுவே வாழ்வு. அவரது உடலும் இரத்தமும் நிலை வாழ்வு தருவது என்ற நம்பிக்கை வேண்டும். "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்; இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?" என்ற நம்பிக்கையற்றவர்கள், முணுமுணுப்பவர்கள் இவ் வாழ்வைப் பெற முடியாது. 'பலர் அவரை விட்டு விலகினர்'.

  • நிறைவான மனம் வேண்டும்

கிடைத்ததில் நிறைவடைய வேண்டும். இறைவன் தந்தது போதும். இறைவன் தந்தது நல்லது என்ற நிறைவு வேண்டும்.ஆசைப்பட்டு அவதிபடக்கூடாது. கையில் இருப்பதில் நிறைவடையாமல் பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது. இருப்பதையும் இழப்பற்கு ஏதுவாகும்.

  • இணைந்திருக்க வேண்டும்

"எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்." (யோவா 6:56) "நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது."(யோவா 15:4) "நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்."(யோவா15:7)

  • வாழ்வாக்க வேண்டும்

நற்கருணையை வாழ்ந்து அனுபவிக்க வேண்டும். அப்போது நிலை வாழ்வை அனுபவிப்போம். பிறருக்காக வாழும்போது, தியாகத்தில், இழப்பதில், கொடுப்பதில் இந்த நற்கருணையை நாம் வாழ்கிறோம்.அப்போது நிலை வாழ்வை, நிறை வாழ்வை நற்கருணையிலிருந்து பெறுகிறோம். நிறை வாழ்வைப் பெறுவோம்.

இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலை_வாழ்வு&oldid=2341983" இருந்து மீள்விக்கப்பட்டது