நிலையான அலை
சமவீச்சு மற்றும் சம அலைநீளம் உடைய இரு முன்னேறு அலைகள்,நேர்க்கோட்டில் எதிரெதிர்த் திசைகளில் செல்லும்போது, ஒன்று மற்றொன்றின் மீது மேற்பொருந்துவதால் நிலையான அலைகள் (standing wave) உருவாகின்றன. தொகுபயன் வீச்சு பெருமமாகும் இடம் எதிர்கணுக்கள் எனப்படுகிறது. தொகுபயன் வீச்சு சிறுமமாகும் (சுழியாகும்) இடம் கணுக்கள் எனப்படுகிறது.
சிறப்பியல்புகள்
[தொகு]நிலையான அலைகளின் சிறப்பியல்புகள் பின்வருமாரு
- அலை வடிவம் நிலையாக இருக்கும்.
- கணுக்களும் எதிர்கணுக்களும் மாறிமாறி உருவாகின்றன.
- இடப்பெயர்ச்சி சுழியாகும் புள்ளிகள் கணுக்கள் என்றும் இடப்பெயர்ச்சி பெருமமாகும் புள்ளிகள் எதிர்க்கணுக்கள் என்றும் கூறப்படும்[1].
- கணுக்களில் அழுத்த மாற்றம் பெருமமாகவும் எதிர்க்கணுக்களில் அழுத்த மாற்றம் சிறுமமாகவும் இருக்கும்.
- கணுக்களில் உள்ள துகள்களைத் தவிர மற்ற அனைத்துத் துகள்களும் சம அலைவு காலத்துடன் தனிச்சீரிசை இயக்கத்தை மேற்கொள்கின்றன.
- ஒவ்வொரு துகளின் வீச்சும் சமமல்ல. எதிர்க்கணுக்களில் பெருமமாக உள்ள வீச்சு, குறைந்து கொண்டே சென்று கணுக்களில் சுழியாகும்.
- கணுக்களில் சுழியாக உள்ள துகள்களின் திசைவேகம், அதிகரித்துச் சென்று எதிர்க் கணுக்களில் பெருமமாகிறது.
- நிலையான அலையில் ஆற்றல் மாற்றப்படுவதில்லை. ஒவ்வொரு அதிர்வின் போதும், ஊடகத் துகள்கள் அனைத்தும் அவற்றின் நடுநிலைப் புள்ளியை ஒரே காலத்தில் இரு முறைகள் கடக்கின்றன.
- ஒரு பிரிவிலுள்ள துகள்கள் அனைத்தும் ஒத்த கட்டத்திலும், அடுத்தடுத்த பிரிவிலுள்ள துகள்கள் எதிரெதிர் கட்டத்திலும் அதிர்வடைகின்றன
அதிர்வெண்கள்
[தொகு]அடிப்பபடை அதிர்வெண்கள்
[தொகு]நிலையான அலைகள் பல அதிர்வெண்களின் உருவாகலாம். அப்படியான அதிர்வுகளின் மிகவும் குறைந்த அதிர்வெண் அடிப்படை அதிர்வெண்.
மேற்சுரங்கள்
[தொகு]நிலையான அலைகளில் அடிப்படை அதிர்வெண்களைவிட அதிகமான அதிர்வெண்களில் அதிரும்போது அவை மேற்சுரங்கள் எனப்படுகிறது.
சீரிசை
[தொகு]நிலையான அலைகள் பல அதிர்வெண்களில் அதிரலாம். அடிப்படை அதிர்வெண் முதலாம் சீரிசை, பின்னர் மேற்சுரங்கள் இரண்டாம் சீரிசை, மூன்றாம் சீரிசை என வரிசையாகக்கூறப்படுகிறது
எடுத்துக்காட்டுகள்
[தொகு]இழுவிசையுடன் உள்ள கம்பியை அதிர்வூட்டும் போது, முன்னேறும் குறுக்கலை உருவாகி, கம்பியின் ஒரு முனைக்குச் சென்று எதிரொலித்து மீண்டு வரும். எனவே நிலையான அலைகள் உருவாகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Formation of Standing Waves". பார்க்கப்பட்ட நாள் 5 சனவரி 2016.