நிலைமண்டில ஆசிரியப்பா
Appearance
நிலைமண்டில ஆசிரியப்பா ஆசிரியப்பாவின் நான்கு வகைகளுள் ஒன்று. ஆசிரியப்பாவில் அனைத்து அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டமைந்தால் அது நிலைமண்டில ஆசிரியப்பா எனப்படும்.
- எடுத்துக்காட்டு
தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல் உயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண்இல் பல்குணம் எழில்பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடை இருளை ஏறத்துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்
மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்