உள்ளடக்கத்துக்குச் செல்

நிலேஷ் குல்கர்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிலேஷ் மொரேஷ்வர் குல்கர்னி (Nilesh Moreshwar Kulkarni pronunciation (பிறப்பு:3 ஏப்ரல், 1973) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார் .மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்டம், முதல் தரத் துடுப்பாட்டம் ஆகிய உள்ளூர் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் . மேலும் இவர் 1994 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1994 ஆம் ஆண்டில் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமான இவர் 1997 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இவர் தற்போது வரை 101 முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 860 ஓட்டங்களையும் , 93 பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 178 ஓட்டங்களையும் ,10 ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 11 ஓட்டங்களையும் 3 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி 5 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.[1]

உள்ளூர் போட்டிகள்[தொகு]

முதல் தரத் துடுப்பாட்டம்[தொகு]

இவர் 1994 ஆம் ஆண்டில் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2007 ஆம் ஆண்டில் மும்பை துடுப்பாட்ட அரங்கத்தில் சவுராட்டிர துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மும்பை துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

பட்டியல் அ[தொகு]

1994 ஆம் ஆண்டில் இவர் பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டிகளிலும் அறிமுகமானார். மார்ச் 28, ஜெய்பூர் துடுப்பாட்ட அரங்கத்தில் ராஜஸ்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மும்பை துடுப்பாட்ட அணி சார்பாக பட்டியல் அ துடுப்பாட்டப் போட்டியில் இறுதியாக விளையாடினார்.

இருபது20[தொகு]

2007 ஆம் ஆண்டில் இவர் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். ஏப்ரல் 3 மும்பை துடுப்பாட்ட அரங்கத்தில் பரோடா துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் மும்பை துடுப்பாட்ட அணி சார்பாக இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.பின் 2007 ஆம் ஆண்டில் ஏப்ரல் 19, அகமதாபாத் துடுப்பாட்ட அரங்கத்தில் வங்காளத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இருபது20 போட்டியில் இவர் மும்பை துடுப்பாட்ட அணி சார்பாக விளையாடினார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

1997 ஆம் ஆண்டில் இவர் சர்வதேச துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். சூலை 26 கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார். 1998 ஆம் ஆண்டில் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் மே 28 அன்று கென்யத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.

1997 ஆம் ஆண்டில் இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். ஆகஸ்ட் 2, கொழும்பு துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இந்தியத் துடுப்பாட்ட அணி சார்பாக தனது முதல் போட்டியில் விளையாடினார்.தனது முதல் பந்திலேயே மார்வன் அடப்பட்டுவை வீழ்த்தினார்.[2]இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் அரிமுகப் பந்திலேயே இழப்பினை வீழ்த்திய முதல் இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார்.[3] 2001 ஆம் ஆண்டில் மார்ச் 18 இல் சென்னையில் உள்ள துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Nilesh Kulkarni". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2019-12-01.
  2. "India in Sri Lanka (1997): Scorecard of first Test"। Cricinfo। Retrieved: 26 April, 2017।
  3. "6, 6, 6, 6". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலேஷ்_குல்கர்னி&oldid=2870169" இலிருந்து மீள்விக்கப்பட்டது