நிலீமா மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலீமா மிசுரா
பிறப்புபரோலா
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியா
பணிசமூக சேவகர்
அமைப்பு(கள்)பகினி நிவேதிதா கிராம அறிவியல் நிலையம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்நிறுவனர், பகினி நிவேதிதா கிராம அறிவியல் நிலையம்
விருதுகள்ரமோன் மக்சேசே விருது 2011
பத்மசிறீ 2013

நிலீமா மிசுரா (Nileema Mishra) என்பவர் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஆவார். இவர் 2011-ல் வளரும் தலைமைக்கான ரமோன் மக்சேசே விருதைப் பெற்றார்.

கல்வி[தொகு]

மகாராட்டிரவின் ஜல்கான் மாவட்டம், பஹதர்பூர் வட்டம் பரோலா கிராமத்தில் 1972-ல் நிலீமா நடுத்தர ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். புனே பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

சமூக சேவை[தொகு]

நிலீமா மிசுரா தனது, கல்லூரி கல்விக்குப் பிறகு, முனைவர் கல்பாக்கின் வழிகாட்டுதலின் கீழ் விக்யான் ஆசிரமம், பபால் உடன் பணிபுரிந்தார். இவர் ஜெகநாத் வாணியின் உதவியுடன் 2005ஆம் ஆண்டு பகினி நிவேதிதா கிராம அறிவியல் நிகேதன் எனும் அரசு சாரா நிறுவனத்தினை பதிவு செய்தார். நீலீமா, கேரிங் பிரண்ட்ஸ், மும்பை மற்றும் லெட்ஸ் ட்ரீம் அறக்கட்டளை, தில்லி ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டிருந்தார்.[1] இவர் தனது விருதுத் தொகையைத் தனது நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினார். இது ஏழைப் பெண்களுக்கு நுண் பொருளாதார மேம்பாட்டில் உதவுகிறது.[2]

விருது[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nileema Mishra, Harish Hande win Magsaysay award". 27 July 2011. Archived from the original on 20 August 2013. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
  2. "Nileema Mishra to donate Magsaysay prize money". ummid.com. 27 July 2011. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
  3. "Mishra, Nileema". www.rmaward.asia. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
  4. "Jaymala Shiledar, Suresh Talwalkar, Milind Kamble among Padma Shri awardees". 26 January 2013. Archived from the original on 25 April 2013. பார்க்கப்பட்ட நாள் 10 August 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலீமா_மிசுரா&oldid=3324545" இலிருந்து மீள்விக்கப்பட்டது