நிலா முற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலா மன்றம்[1] ஒரு தமிழ் இணைய மன்றம். பல படைப்பாளிகளின் எழுத்து,எண்ணங்களை ஊக்குவிக்கும் கூடற்தளமாக இணையத்தில் 2000ம் ஆண்டு முதல் சேவையாற்றி வரும் ஒரு இணையம்.

நிலா வெளிச்சத்தில் ஒன்றுகூடும் இடங்களை நிலா முற்றம் என்று கூறுவர். இதே போன்று இணையத்தில் படைப்பாளிகளும்,வாசகர்களும் ஒன்று கூடும் இடமாக நிலா முற்றம் விழங்கி வருகிறது. இணையத்தில் பல திறமையான எழுத்தாளர்களை உருவாக்கி வரும் நிலா முற்றத்தில் பல அரிய தமிழ் ஆக்கங்ளை காணலாம்.

முற்று முழுதாக நிலா முற்ற உறுப்பினர்களினால் சுயமாக உருவாக்கப்பட்ட பல அறிவியல் தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் தமிழ் விக்கியில் பரவலாகக் காணப்படுகின்றன.

கவிதைகள்,கட்டுரைகள்,சிறு கதைகள்,தொடர் கதைகள் முதல் அகராதி வரை நிலா முற்றத்தின் பயன்பாடுகள் விரிந்து கொண்டே செல்கின்றன.

நிலா முற்றம் - ஆரம்பம்[தொகு]

இணைய வானொலி ஊடகங்களில் பழமை வாய்ந்த நிலா வானொலி நேயர்களின் திறமைகளுக்கும் இடம் கொடுத்து,அவை இணைய வாசகர்களையும் சென்றடையச் செய்தல் எனும் ஒரே நோக்கத்துடன் நிலா வானொலியில் உருவாக்கப்பட்ட பதிவுகள் பகுதியே நிலா முற்றமாகும்.

நிலா முற்றம் - பிரிவுகளிற் சில[தொகு]

அறிவியல் பூங்கா : தமிழில் உருவாக்கப்பட்ட பல் வேறு அறிவியற் தகவல்கள்,கட்டுரைகள் அடங்கிய பகுதி.

விக்கி மேற்கோள்களிற் சில : எரிமலை,ஆபிரகாம் லிங்கன்

கவிதைகள்  : புதுக் கவிதைகள்,ஹைகூ,மரபுக் கவிதைகள் முதல் பல்வேறு வடிவான கவிதைகள்.

கதைகள் : சிறுகதைகள், தொடர் கதைகள்.

சிறுவர் முற்றம் : சிறுவர்களுக்கான கதைகள்,கவிதைகள்,சிறுவர் கல்வி போன்ற பயனுள்ள பகுதிகள்.

அகராதி  : இலகு முறையில் தமிழ் சொற்கள் அதற்கான விளக்கங்களை உள்ளடக்கிய அகராதி.

நிலா முற்றம் - செயற்பாடு[தொகு]

கலைஞர்கள்,படைப்பாளிகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும் என்பதே நிலா முற்றத்தின் முழுமையான செயற்பாட்டுத் திட்டமாகும்.அரசியல் தவிர்க்கப்பட்ட படைப்பாளிகளின் ஒன்று கூடற் தளமாக இயங்கும் நிலா முற்றம்,மிகவும் கட்டுக் கோப்பான நிர்வாக நிலைப்பாட்டில் இயங்கும் ஒரு தளமாகும்.

நிலா முற்றம் - பொழுது போக்கு[தொகு]


இணைய உலகில் பொழுது போக்குக்காக இணைந்து கொள்ளும் பார்வையாளர்களையும் திருப்திப் படுத்தும் நிலா உலகில் பல்வேறு உப பிரிவுகளும் காணப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலா_முற்றம்&oldid=554409" இருந்து மீள்விக்கப்பட்டது