நிலாவின் சோடிய வால்
நிலாவின் சோடிய வால் (Sodium tail of the moon) மனித கண்களால் கண்டறிய முடியாத அளவுக்கு மெல்லியதாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வாலை 1998 ஆம் ஆண்டில் பாசுட்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தார்கள். லியோனிட் விண்கல் பொழிவை உற்றுநோக்கி கவனித்ததன் விளைவாக இது கண்டுபிடிக்கப்பட்டது[1][2].
ஒளியணுக்களால் தூண்டப்பட்ட பரப்பு விடுகை, வெறிச்சோடி, சூரியக் காற்று உமிழ்வு, மற்றும் விண்கல் தாக்கங்கள் போன்ற காரணங்களால் நிலா அதன் மேற்பரப்பில் இருந்து நுண்ணிய தூசியாக அணுநிலை சோடியத்தை தொடர்ந்து வெளியிடுகிறது [3]. சூரியனுக்கு அப்பால் தொலைவில் காணப்படும் சோடியம் அணுக்களை சூரிய கதிர்வீச்சு அழுத்தம் முடுக்கிவிடுவதால் சூரியனுக்கு எதிர்திசையில் நீளமான வால் ஒன்று உருவாகிறது.
சிறிய விண்கற்களின் தொடர்ச்சியான தாக்கங்கள் காரணங்களால் நிலாவிலிருந்து ஒரு நிலையான வால் அமைப்பை உருவாக்குகின்றன, ஆனால் லியோனிட்கள் அதை தீவிரப்படுத்தின. [4]இதனால் பூமியிலிருந்து வழக்கத்தைப் போல இல்லாமல் கவனிக்க முடிந்தது [5].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Astronomers discover that moon has long, comet-like tail". CNN. 1999-06-07. http://www.cnn.com/TECH/space/9906/07/lunar.sodium.trail/. பார்த்த நாள்: 2007-12-18.
- ↑ "The Sodium Tail of the Moon". NASA. 2009-12-01. Retrieved 2017-10-20
- ↑ "The Sodium Tail of the Moon". NASA. December 1, 2009. https://ntrs.nasa.gov/search.jsp?R=20110004923.
- ↑ "Lunar Leonids 2000". NASA. 2000-11-17 இம் மூலத்தில் இருந்து 2007-11-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071126081027/http://science.nasa.gov/headlines/y2000/ast26oct_1.htm. பார்த்த நாள்: 2007-12-18.
- ↑ "Moon's tail spotted". பிபிசி. 1999-06-09. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/363105.stm. பார்த்த நாள்: 2009-11-15.
.