நிலாப்பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலாப்பூச்சி நிலா வெளிச்சத்தில் விளையாடும் விளையாட்டு.

நிலா வெளிச்சத்தில் ஆள்-நிழல் விழும். அந்த நிழலை நிலாப்பூச்சி என்பர். அந்த நிழலில் நிற்பவரைத் தொடுதல் இந்த விளையாட்டு. ஒருவர் தொடுபவர். ஏனையோர் தொடப்படாமல் இருக்க நிலா வெளிச்சத்தில் நிற்கவேண்டும். தொடுபவருக்கு உதவி செய்ய ஒருவர் மற்றொருவர் மீது நிழல் விழும்படி வந்து நின்று உதவுவார். நிழலில் நிற்கும்போது தொடப்பட்டால், தொடப்பட்டவர் தொடுபவராகி ஆட்டம் தொடரும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

கருவிநூல்[தொகு]

  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழர் விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலாப்பூச்சி&oldid=1012905" இருந்து மீள்விக்கப்பட்டது