நிலாஞ்சனா சர்க்கார்
Appearance
நிலாஞ்சனா சர்க்கார் அல்லது நீலஞ்சோனா சப்யசாச்சி தாக்கூர் இந்தியாவின் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகராவார், 2009 ம் ஆண்டில் வெளியான பெங்காலித் திரைப்படமான ஹவுஸ்ஃபுல் பாடலுக்காக 57வது தேசிய திரைப்பட விருதுகள் (2009) நிகழ்ச்சியில் சிறந்த பெண் பின்னணிப் பாடகி விருதை பெற்றுள்ளார். முன்னதாக இவர் பல்வேறு விளம்பரப் பாடல்களையும் பாடியுள்ளார்.[1] இவர் தேசிய விருதை வென்ற பிஷ் என்ற பாடலை இவர் முக்கிய பங்கு வகித்த காயா இசைக்குழு இயற்றியுள்ளது.[2] திரைப்பட பின்னணி பாடகியாக மாறுவதற்கு முன்னரே இவர் 92.7 பிக் எஃப்எம் வானொலியில் தொகுப்பாளராக ஆர்ஜே நீல் என்றும் புகழ் பெற்றிருந்தார். அவரது வானொலி நிகழ்ச்சியான ரேட்டர் ஓடிதி ஒரு தசாப்தமாக ஒலிபரப்பப்பட்டுள்ளது.
2 டிசம்பர் 2018 அன்று நிலாஞ்சனா, சப்யசாசி சக்ரவர்த்தி தாக்கூரை மணந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sen, Zinia (17 October 2010). "Music is Nilanjana's first love". http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Music-is-Nilanjanas-first-love/articleshow/6566619.cms. பார்த்த நாள்: 1 October 2014.
- ↑ Sen, Zinia (16 September 2010). "Band Kaya is thrilled about Nilanjana Sarkar winning the National Award for Best Female Playback Singer.". http://timesofindia.indiatimes.com/home/Band-Kaya-is-thrilled-about-Nilanjana-Sarkar-winning-the-National-Award-for-Best-Female-Playback-Singer-The-song-Bish-that-has-won-Nilanjana-the-famed-award-is-composed-by-the-band-Says-band-member-Arindam-Its-a-great-news-We-are-proud-of-Nilanjana-Seems-like-Kaya-is-also-slowly-gaining-foothold-in-the-industry-It-has-bagged-two-more-films-Street-Light-and-Sea-Beach-work-on-which-will-begin-soon-/articleshow/6566341.cms?. பார்த்த நாள்: 1 October 2014.