நிலவியல் நேர அளவு

நிலவியல் நேர அளவு அல்லது புவியியல் கால அளவுகோல் (ஆங்கிலம்: Geologic time scale) (GTS) என்பது புவியின் பாறைப் பதிவை அடிப்படையாகக் கொண்ட காலத்தின் அளவுகோல் ஆகும். இந்த அளவுகோல் முறைமை, காலவரிசைப்படியான காலக்கணிப்பு முறை (Chronostratigraphy); மற்றும் புவியியல் காலக்கணிப்பைப் (Geochronology) பயன்படுத்துகிறது. புவியியல் காலக்கணிப்பு என்பது பாறைகளின் வயதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்ட புவியியலின் ஓர் அறிவியல் பிரிவாகும்.
புவியியல் வரலாற்று நிகழ்வுகளின் நேரம் மற்றும் வரலாற்று உறவுகளை விவரிக்க புவியியலாளர்கள், தொல்லுயிரியல் வல்லுநர்கள், புவி இயற்பியலாளர்கள், புவி வேதியியலாளர்கள் மற்றும் பழங்கால காலநிலை ஆய்வாளர்கள் (Paleoclimatology) போன்ற புவியியல் அறிவியலாளர்களால் புவியியல் கால அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது.
பாறை அடுக்குகளின் ஆய்வு; அவற்றின் தொடர்புத் தன்மைகளைக் கவனித்தல்; மற்றும் பாறைத் தொல்பொருள்கள், பழங்கால காந்தப் பண்புகள் மற்றும் புதைபடிவங்கள் போன்ற புவியியல் கூறுகளை அடையாளம் காண்பதன் மூலமாகப் புவியியல் கால அளவுகோல் உருவாக்கப்பட்டுள்ளது. புவியியல் நேரத்தைத் தரப்படுத்துவது, பன்னாட்டு பாறைப்படிவியல் ஆணையத்தின் (International Commission on Stratigraphy) (ICS) பொறுப்பாகும்.[1][2]
பொது
[தொகு]புவியியல் கால அளவுகோல் என்பது பூமியின் வரலாறு முழுவதும் நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் சரியான நேரத்தைக் குறிக்கும் ஒரு வழி முறையாகும். இது சுமார் 4.54 ± 0.05 Ga (4.54 பில்லியன் ஆண்டுகள்) கால அளவைக் கொண்டுள்ளது.[3]
இந்தக் கால அளவுகோல்; முக்கிய புவியியல் அல்லது பழங்காலவியல் நிகழ்வுகளுடன் தொடர்புடைய அடுக்கு வரைபடத்தில் அடிப்படை மாற்றங்களைக் கவனிப்பதன் மூலம் அந்த அடுக்குகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கிறது; அதைத் தொடர்ந்து நேரத்தையும் ஒழுங்கமைக்கிறது.[4]
கால அளவுகோல்
[தொகு]பாறை அடுக்கு வரைவியல் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ள புவியின் காலக்கோட்டு காலஅளவுகோல்.



மேலும் காண்க
[தொகு]- புவியின் வரலாறு
- இயற்கை வரலாறு
- நிலவியலின் வரலாறு
- படிவளர்ச்சி காலக்கோடு
- உயிரினங்களின் பரிணாம வரலாறு
- சூரியக் குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும்
- புவி நிலாவின் நிலம் சார்ந்த வரலாற்றுக் காலஅளவுகோல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Statues & Guidelines". International Commission on Stratigraphy. Retrieved 2022-04-05.
- ↑ Cohen, K.M.; Finney, S.C.; Gibbard, P.L.; Fan, J.-X. (2013-09-01). "The ICS International Chronostratigraphic Chart" (in en). Episodes 36 (3): 199–204. doi:10.18814/epiiugs/2013/v36i3/002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0705-3797.
- ↑ Dalrymple, G. Brent (2001). "The age of the Earth in the twentieth century: a problem (mostly) solved". Special Publications, Geological Society of London 190 (1): 205–221. doi:10.1144/GSL.SP.2001.190.01.14. Bibcode: 2001GSLSP.190..205D.
- ↑ Shields, Graham A.; Strachan, Robin A.; Porter, Susannah M.; Halverson, Galen P.; Macdonald, Francis A.; Plumb, Kenneth A.; de Alvarenga, Carlos J.; Banerjee, Dhiraj M. et al. (2022). "A template for an improved rock-based subdivision of the pre-Cryogenian timescale" (in en). Journal of the Geological Society 179 (1): jgs2020–222. doi:10.1144/jgs2020-222. பன்னாட்டுத் தர தொடர் எண்:0016-7649. Bibcode: 2022JGSoc.179..222S.
வெளி இணைப்புகள்
[தொகு]
- The current version of the International Chronostratigraphic Chart can be found at stratigraphy.org/chart
- Interactive version of the International Chronostratigraphic Chart is found at stratigraphy.org/timescale
- A list of current Global Boundary Stratotype and Section Points is found at stratigraphy.org/gssps
- NASA: Geologic Time (archived 18 April 2005)
- GSA: Geologic Time Scale (archived 20 January 2019)
- British Geological Survey: Geological Timechart
- GeoWhen Database (archived 23 June 2004)
- National Museum of Natural History – Geologic Time (archived 11 November 2005)