நிலம் புகும் சொற்கள் (நூல்)
தோற்றம்
| நிலம் புகும் சொற்கள் | |
|---|---|
| நூல் பெயர்: | நிலம் புகும் சொற்கள் |
| ஆசிரியர்(கள்): | சக்தி ஜோதி |
| வகை: | கவிதை |
| துறை: | கவிதை |
| இடம்: | உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி-1, தொலைபேசி: 0431-6523099. |
| மொழி: | தமிழ் |
| பக்கங்கள்: | 78 |
| பதிப்பகர்: | உயிர் எழுத்து பதிப்பகம் |
| பதிப்பு: | சூன், 2008 |
| ஆக்க அனுமதி: | ஆசிரியருக்கு |
நிலம் புகும் சொற்கள் எனும் கவிதை நூல் டெம்மி அளவில் 80 பக்கங்களைக் கொண்ட ஒரு நூல். இது திருச்சி, உயிர் எழுத்து பதிப்பகம் வழியாக வெளியிடப்பட்டுள்ளது.
நூலாசிரியர்
[தொகு]இந்நூலின் ஆசிரியர் சக்தி ஜோதி. இவர் தேனி மாவட்டத்திலுள்ள அனுமந்தன்பட்டி எனும் ஊரில் பிறந்து, திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் எனும் ஊரில் வசித்து வருபவர். உயிர் எழுத்து, காலச்சுவடு, தீராநதி, புதியபார்வை போன்ற இலக்கிய இதழ்களில் இவரது கவிதைகள் அடிக்கடி இடம் பெற்று வருகின்றன.
அணிந்துரை
[தொகு]இக்கவிதை நூலுக்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் அணிந்துரை எழுதியிருக்கிறார்.
உள்ளடக்கம்
[தொகு]இந்நூலில் நூலாசிரியர் எழுதிய 50 புதுக்கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன.