நிலத்தடி நிலக்கரி வளிமமாக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிலத்தடி நிக்கரி வளிமமாக்கல் அல்லது நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கல் (underground coal gasification) என்பது நிலக்கரியை நிலத்தின் அடியில் வாயுவாக்கும் தொழில்முறைச் செயல்முறை ஆகும். சுரங்கம் தோண்டப்படாத நிலக்கரி உள்ள பகுதிகளில் ஆக்சிசனேற்றிகளைப் பயன்படுத்தி வளிமம் நிலமட்டத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இவ் வளிமமானது நிலப்பரப்பில் துளைகளிட்டு எடுக்கப்படுகிறது. இவ்வாயு எரிபொருளாகவோ ஆற்றல் உற்பத்திக்கோ பயன்படுத்தப்படலாம். வழக்கமான நிலக்கரிச் சுரங்கத்திற்கு ஒரு மாற்றாக இது முன்வைக்கப்படுகிறது.

பொருளாதாரம்[தொகு]

வழக்கமான நிலக்கரிச் சுரங்கத்தைக் காட்டிலும் நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கல் முறையால் செலவு குறைவதோடு ஈட்டமும் அதிகம்.[1]

சுற்றுச் சூழல் விளைவுகள்[தொகு]

சுற்றுச் சூழலுக்கு சாதகமான மற்றும் பாதகமான விளைவுகள் இரண்டையுமே நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கல் முறை உருவாக்குகிறது. சல்ஃபர் டை ஆக்சைடு மற்றும் நைதரசன் ஆக்சைடு உமிழ்வைக் குறைக்கிறது.[2] [3] ஆனால் நிலத்தடி நீரில் நச்சுப் பொருட்கள் கலப்பை உண்டாக்கி விடுகிறது.[2][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Copley, Christine (2007). "Coal". in Clarke, A. W.; Trinnaman, J. A. (PDF). Survey of energy resources (21 ). World Energy Council. பக். 7. ISBN 0946121265. http://www.worldenergy.org/documents/ser2007_final_online_version_1.pdf. 
  2. 2.0 2.1 Burton, Elizabeth; Friedmann, Julio; Upadhye, Ravi (2007) (PDF). Best Practices in Underground Coal Gasification. Technical Report. Lawrence Livermore National Laboratory. W-7405-Eng-48. http://www.purdue.edu/discoverypark/energy/pdfs/cctr/BestPracticesinUCG-draft.pdf. பார்த்த நாள்: 2010-07-31. 
  3. Shu-qin, L., Jun-hua, Y (2002). Environmental Benefits of underground coal gasification. Journal of Environmental Sciences, vol. 12, no. 2, pp.284-288
  4. National Research Council (U.S.). Committee on Ground-Water Resources in Relation to Coal Mining (1981). Coal mining and ground-water resources in the United States: a report. United States National Academies. பக். 113. http://books.google.com/?id=nEsrAAAAYAAJ&pg=PA113.