நிலக்கொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொங்குநாட்டில் அவிநாசி திருத்தலத்தில் அவிநாசியப்பர் உடனமர் பெருங்கருணைச்செல்வி திருக்கோவிலுக்கு கி.பி.1223 ஆம் ஆண்டு கொங்கு சோழன் வீரராசேந்திரன் ஆட்சியில் நிலக்கொடை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இம்மன்னனின் 15 ஆவது ஆட்சியாண்டில் பொங்கலூர்கா நாட்டில் கானூர் என்னும் ஊரில் உள்ள முதலிகளில் அட்டாலைச் சேவகன், வளத்து வாழ்வித்தான் வீரராசேந்திர இருங்கோளன், அவனது மனைவி சடைமேலிருந்தாள் ஆகிய இருவரும் உடையபிராட்டிச் சதுர்வேதி மங்கலம் என்னும் கொழுஞ்சிபாடி குலோத்துங்க சோழ மந்நறையில் அவர்களுக்குரிய நிலத்தில் ஒரு மா அளவுள்ள நிலத்தை பெருங்கருணைச்செல்வி திருக்கோவிலுக்கு கொடையாக வழங்கியுள்ளனர். மந்நறை என்பது வளமிக்க நிலமுள்ள பகுதியாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கோயமுத்தூர் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 1. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 2006. பக். 7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலக்கொடை&oldid=3873892" இலிருந்து மீள்விக்கப்பட்டது