நிர்லெப் கவுர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்லெப் கவுர் (1927-1987) இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 4வது மக்களவையில் சங்ரூரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கவுர் பாட்டியாலாவில் ஆகத்து 11, 1927-ல் அரச குடும்பத்தில் பிறந்த நிர்லெப் கவுர், சர்தார் கியான் சிங் ராரேவாலாவின் மகள் ஆவார். ராரேவாலா பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநிலங்களின் முதல் முதலமைச்சர் ஆவார்.[1][2] கவுர் தனது பள்ளிப் படிப்பை லாகூரில் உள்ள திரு இருதய பள்ளியில் பயின்றார்.[1]

பணி[தொகு]

கவுர் 1967 இந்தியப் பொதுத் தேர்தலில் 4வது மக்களவைக்கு அகாலி தளம் - சாந்த் ஃபதே சிங் இடத்தில் போட்டியிட்டார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசு வேட்பாளரை 98,212 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[3] இவரும், பாட்டியாலாவைச் சேர்ந்த ராஜ்மாதா மொஹிந்தர் கவுரும், மறுசீரமைக்கப்பட்ட பஞ்சாபிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் இரண்டு பெண்கள் ஆவர்.[4] இவர் முன்பு சுதந்திராக் கட்சியின் செயலாளராகவும், பாட்டியாலாவில் உள்ள மாதா சாஹிப் கவுர் கல்வி நிலையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.[1]

சிரோமணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழுவின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாலும் இத்தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண், கவுர் ஆவார்.[5] 1980 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில், இவர் பயல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளர் பியாந்த் சிங்கிடம் 2,936 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மார்ச் 14, 1942-ல், இவர் சர்தார் ராஜ்தேவ் சிங்கை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1] சண்டிகர் நகரில் இவரது வீடு நீச்சல் குளத்துடன் கட்டப்பட்ட முதல் வீடாகும்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Members Bioprofile: Sardarni, Nirlep Kaur". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  2. Bains, Tara Singh; Johnston, Hugh J. M. (1995). The Four Quarters of the Night: The Life-journey of an Emigrant Sikh. McGill-Queen's Press - MQUP. பக். 158. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7735-1265-8. https://books.google.com/books?id=VuapG3JHaOIC&pg=PA158. 
  3. "Statistical Report on General Elections, 1967 to the Fourth Lok Sabha" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். p. 327. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  4. "Patiala royals reign supreme in politics too". https://timesofindia.indiatimes.com/news/Patiala-royals-reign-supreme-in-politics-too/articleshow/31977966.cms. பார்த்த நாள்: 28 November 2017. 
  5. Punjab 2000: Political and Socio-economic Developments. Anamika Publishers & Distributors. பக். 180. https://books.google.com/books?id=1ZNgVkbUtagC&pg=PA180. 
  6. "Statistical Report on General Election, 1980 to the Legislative Assembly of Punjab" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். p. 74. பார்க்கப்பட்ட நாள் 28 November 2017.
  7. "Pool proof". The Tribune. 14 June 2009. http://www.tribuneindia.com/2009/20090614/ttlife.htm. பார்த்த நாள்: 28 November 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்லெப்_கவுர்&oldid=3743834" இலிருந்து மீள்விக்கப்பட்டது