நிர்மல் சைனி
நிர்மல் சைனி Nirmal Sainik | |
|---|---|
| பிறப்பு | நிர்மல் கவுர் சைனி 8 அக்டோபர் 1938 சேய்க்குப்புரா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா (தற்போது பஞ்சாப், பாக்கித்தான்) |
| இறப்பு | 13 சூன் 2021 (அகவை 82) மொகாலி, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| பணி | கைப்பந்தாட்டம் |
| பணியகம் | இந்திய தேசிய பெண்கள் கைப்பந்தாட்ட அணியின் தலைவி volleyball team]] |
| வாழ்க்கைத் துணை | மில்கா சிங் (தி. 1963) |
| பிள்ளைகள் | இயீவ் மில்கா சிங் உட்பட ஐவர் |
நிர்மல் கவுர் சைனி (Nirmal Kaur Saini) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கைப்பந்து வீராங்கனை ஆவார். 1938 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்தியப் பெண்கள் தேசிய கைப்பந்து அணியின் தலைவியாகவும் இருந்தார்.[1] இவர் தடகள வீரர் மில்கா சிங்கின் மனைவியும், இயீவ் மில்கா சிங்கின் தாயும் ஆவார்.
வாழ்க்கை வரலாறு.
[தொகு]தற்போது பாக்கித்தானின் ஒரு பகுதியாக உள்ள சேக்புரா நகரத்தில் 1938 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார்.[2] மாநிலத் துறையில் பெண்களுக்கான விளையாட்டு இயக்குநராக இருந்தார். 1958 ஆம் ஆண்டில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]நிர்மல் சைனி பின்னர் மில்கா சிங்கை திருமணம் செய்து கொண்டார். [3] 3 மகள்கள் மற்றும் 1 மகனின் தாயாக இருந்தார். குழிப்பந்தாட்ட வீரர் இயீவ் மில்கா சிங் இவரது மகனாவார். நிர்மல் சைனி சண்டிகரில் வசித்து வந்தார். 1999 ஆம் ஆண்டில், டைகர் இல் போரில் இறந்த அவில்தார் விக்ரம் சிங்கின் ஏழு வயது மகனை இவர்கள் தத்தெடுத்தனர்.
நிர்மல் சைனி 2021 ஆம் ஆண்டு சூன் மாதம் 13 ஆம் தேதியன்று மொகாலியில் கோவிட்-19 காரணமாக இறந்தார். இவரது கணவரும் ஐந்து நாட்களுக்குப் பிறகு, வைரசால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[2][1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Legendary sprinter Milkha Singh's wife Nirmal dies due to COVID-19 complications | Off the field News - Times of India" (in en). 13 June 2021. https://timesofindia.indiatimes.com/sports/off-the-field/legendary-sprinter-milkha-singhs-wife-nirmal-dies-due-to-covid-19-complications/articleshow/83487179.cms.
- ↑ 2.0 2.1 "Nirmal Kaur, Milkha Singh's wife, dies after fighting Covid-19 for 3 weeks". Hindustan Times (in ஆங்கிலம்). 13 June 2021. Retrieved 13 June 2021.
- ↑ "The Tribune - Magazine section - Saturday Extra". Tribuneindia.com. 4 November 2006. Archived from the original on 6 October 2008. Retrieved 20 September 2009.