நிர்மல் ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிர்மல் ஓவியங்கள்

நிர்மல் ஓவியங்கள் (Nirmal paintings) என்பது இந்தியாவின் தெலங்காணாவின் நிர்மல் மாவட்டத்திலுள்ள நிர்மலில் வரையப்படும் பிரபலமான ஓவியங்களின் வடிவமாகும். [1] அவர்கள் உள்ளூரில் ஒரு சிறிய அளவிலான தொழிலை உருவாக்குகிறார்கள். கைவினைஞக் கலைஞர்கள் ஒரு சமூகத்தை உருவாக்கி, நிர்மலில் தங்கி, தங்கள் கலையை ஒரு சிறிய அளவிலான வணிக வடிவத்தில் கடைப்பிடிக்கின்றனர். [2] இவ்வகை ஓவியங்கள் தங்க நிறங்களைக் கொண்டுள்ளன. [3] [4]

வரலாறு[தொகு]

இந்தக் கலை வடிவம் அதன் தோற்றமான நிர்மல் என்பதிலிருந்து அதன் பெயரைப் பெற்றுள்ளது. நிர்மல் கலையின் பரிணாமம் காக்கத்திய வம்சத்தின் காலத்திற்கு செல்கிறது. இந்த கலை 14ஆம் நூற்றாண்டில் நகாசு என அழைக்கப்படும் கைவினைஞர்களின் குழுவால் நடைமுறையில் இருந்தது. முகலாயர்கள் கலையை மிகவும் நேசித்தார்கள். அவர்கள் திறமையையும் கலையையும் ஆதரித்தனர். 1950களில் தான் சீமாட்டி ஹைதெரி என்பார் இந்த கைவினைஞர்களை ஐதராபாத்து சுதேச மாநிலத்திற்கு அழைத்து வந்து அவர்களின் வேலைப்பாடுகளை ஊக்குவித்தார். இந்த ஓவியங்களின் நிறங்கள் தாதுக்கள், மூலிகைகள் மற்றும் பல்வேறு தாவரங்களிலிருந்து எடுக்கப்படுகின்றன. இந்த ஓவியங்களின் கருப்பொருள்கள் அஜந்தா குகை ஓவியங்களிருந்தும், பிற முகுலாய கலைகளிலிருந்தும் செல்வாக்கை ஈர்த்துள்ளன. இந்த ஓவியங்கள் தங்க நிறத்தில் கருப்பு நிறப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nirmal Crafts". discoveredindia.com.
  2. "Lepakshi expo begins - ANDHRA PRADESH" (2007-08-12). மூல முகவரியிலிருந்து 2007-10-17 அன்று பரணிடப்பட்டது.
  3. "Traditional art emporium at its finest - HYDB" (2008-01-12). மூல முகவரியிலிருந்து 2008-04-29 அன்று பரணிடப்பட்டது.
  4. "Lepakshi expo inaugurated - ANDHRA PRADESH" (2010-07-22).
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மல்_ஓவியங்கள்&oldid=3142261" இருந்து மீள்விக்கப்பட்டது