நிர்மலா (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
'நிர்மலா '(இரண்டாவது மனைவி)
நூலாசிரியர்பிரேம்சந்த்
உண்மையான தலைப்புநிர்மலா (निर्मला)
மொழிபெயர்ப்பாளர்அலோக் ராய் டேவிட் ரூபின் [1]
அட்டைப்பட ஓவியர்அலோக் ராய், டேவிட் ரூபின்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
வகைபுனைவு
வெளியிடப்பட்டதுசனவரி 1927[1]
ISBN9780195658262 மொழிபெயர்ப்பு பதிப்பு - ஆக்ஸ்போர்டு[2]

நிர்மலா Nirmala (இந்தி: निर्मला (தூய்மை) அல்லது இரண்டாவது மனைவி [upper-alpha 1]) என்பது இந்தி புனைவுப் புதினம் (இலக்கியம்) ஆகும். இதனை இந்தி மற்றும் உருது மொழி எழுத்தாளரான பிரேம் சந்த் எழுதியுள்ளார். இந்த மிகை உணர்ச்சி புதினம் நிர்மலா எனும் கதாப்பாத்திரத்தை மையமாகக் கொண்டது. நிர்மலா எனும் இளம் பெண் தனது விருப்பத்திற்கு எதிராக தனது தந்தை வயதுடையவர்க்கு திருமணம் செய்துவைக்கப்படுகிறார்.

இந்தப் புதினம் 1927 ஆம் ஆண்டில் வெளியானது. இந்தக் கதையானது வரதட்சணை மற்றும் பொருந்தாத் திருமணம் (வயது வித்தியாசம்) போன்ற பிரச்சினைகள் பற்றி விவரிக்கிறது. 1920 களில் சமூக சீர்திருத்தம் தேவைப்பட்ட நாட்களில் அதற்கான முயற்சியாக இந்தப் புதினம் அமைந்தது. பல அறிஞர்களால் இந்தப் புதினம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1988 இல் இரண்டாவது மனைவி எனும் பெயரில் டேவிட் ரூபின் முதன் முதலில் மொழிபெயர்த்தார். பின் 1999 இல் நிர்மலா எனும் பெயரிலேயே அலோக் ராய் என்பவர் மொழி பெயர்த்தார். இவர் பிரேம் சந்த் அவர்களின் பேரன் ஆவார்.

கதைச் சுருக்கம்[தொகு]

உதயபானு லால் என்பவர் ஒரு வழக்கறிஞர். அவர் தன்னுடைய பதினைந்து வயது மகள் நிர்மலாவை பாலச்சந்திர சின்ஹாவின் மகனான புவன்மோகன் சின்ஹாவிற்குத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். அந்த நேரத்தில் இவரால் சிறை சென்ற இவரின் எதிரியான மதாயி என்பவரால் கொலை செய்யப்படுகிறார். அவர் இறந்ததால், வரதட்சணை கிடைக்காது என்பதனால் பாலச்சந்திர சின்ஹா இந்தத் திருமணம் நடைபெறாது எனக்கூறுகிறார். வறுமையின் காரணமாக நிர்மலாவின் தாய் கல்யாணி, நிர்மலாவை தோதாராம் என்பவருக்கு திருமணம் செய்யது வைக்கிறார். தோதாராம், நிர்மலாவை விட இருபது வயது மூத்தவர். இவர் தனது மனைவிக்கு உடல், உள ரீதியான மகிழ்வைத் தர முற்படுகிறார். ஆனால் இயலவில்லை. நிர்மலாவிற்கும் இவரின் மேல் மதிப்பு மட்டுமே உண்டாகிறது.

தோதாராமின் முதல் திருமணத்தால் அவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளன. இவரின் மூத்தமகனான மன்சராம் என்பவருக்கு , நிர்மலாவை விட ஒரு வயது தான் அதிகம். எனவே தனது மூத்த மகன் மற்றும் நிர்மலாவிற்கும் இடையிலான உறவைப் பற்றி தவறாக சந்தேகிக்கிறார். இதனால் தனது மூத்த மகனை விடுதிக்கு அனுப்பி படிக்க வைக்கிறார். விடுதிச் சூழலின் காரணமாக அவருக்கு உடல்நலமின்மை ஏற்படுகிறது.

மருத்துவமனையில் புவன்மோகன், மன்சராமைக் கவனித்துக்கொள்கிறார். காசநோயின் காரணமாக மன்சராம் இறந்துவிடுகிறார். தனது மகனுடைய இறப்பிற்குத் தாம் தான் காரணம் என நினைத்து வேதனைப்படுகிறார் தோதாராம். அவருடைய இரண்டாவது மகன் ஜியராம் , நிர்மலாவின் நகைகளை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிறார். பின் ஒருநாள் அவர் தற்கொலை செய்துகொள்கிறார். தோதாராமின் மூன்றாவது மகன் சியாராம் துறவியாகச் செல்வதாக பொய் கூறி வீட்டை விட்டுச் செல்கிறார். பிறகு தோதாராம் தனது மூன்றாவது மகனைத் தேடிச் செல்கிறார்.  

அதேசமயத்தில் புவன்மோகன் , நிர்மலாவின் வாழ்க்கையில் மீண்டும் நுழைந்து அவரை தீ நெறிப்படுத்த நினைக்கிறார். புவனின் மனைவிக்குத் தெரிந்து அவரை கடுமையாகத் திட்டுகிறார். இதனால் மனமுடைந்த புவன்மோகன் சின்ஹா தற்கொலை செய்துகொள்கிறார்.[1] தொடர்ச்சியாக நடந்த நிகழ்வுகளாலும், மோசமான உடல்நிலைகளாலும் பாதிக்கப்பட்ட நிர்மலா தனது மகள் ஆஷாவை தோதாராமின் விதவை சகோதரி ருக்குமனியிடம் கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறார்.[3][4]

சான்றுகள்[தொகு]

  1. Though "Nirmala" means "virtuous" or "pure", David Rubin, the first translator, titled it as The Second Wife.[1]
  1. 1.0 1.1 1.2 1.3 "Shodhganga" (PDF). பார்க்கப்பட்ட நாள் May 4, 2014.
  2. "ISBN". பார்க்கப்பட்ட நாள் October 3, 2014.
  3. Tribune India. "Tribuneindia". பார்க்கப்பட்ட நாள் November 24, 2014.
  4. "OUP". Oxford Databases. பார்க்கப்பட்ட நாள் October 3, 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_(புதினம்)&oldid=2501478" இலிருந்து மீள்விக்கப்பட்டது