நிர்மலா மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிர்மலா மிசுரா
பிறப்பு21 அக்டோபர் 1938
மஜில்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு31 சூலை 2022(2022-07-31) (அகவை 83)
சேத்லா, கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
பணிபின்னணிபாடகர்
பெற்றோர்
  • மோகினிமோகன் மிஸ்ரா
  • பபானி தேவி
வாழ்க்கைத்
துணை
பிரதீப் தாசுகுப்தா
பிள்ளைகள்சுபோஜித் தாசுகுப்தா (மகன்)

நிர்மலா மிசுரா (Nirmala Mishra)(21 அக்டோபர் 1938 - 31 சூலை 2022)[1] என்பவர் பெங்காலி மற்றும் ஒடியா திரைப்படப் பாடல்களைப் பாடும் இந்தியப் பாடகர் ஆவார். இவர் பிரபலமான அசாமிய பாடல்களையும் பாடினார். குறிப்பாக "கி நாம் டி மாடின்" இவர் பாடிய பாடலாகும். ஒடியா இசைக்கு இவரின் வாழ்நாள் பங்களிப்பிற்காக சங்கீத் சுதாகர் பாலக்ருஷ்ண தாசு விருதைப் பெற்றார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

துர்கா சப்தமி தினத்தன்று பண்டித மோகினிமோகன மிசுரா மற்றும் பபானி தேவி ஆகியோருக்கு மகளாக மஜில்பூரில் பிறந்தார் மிசுரா. பின்னர் இவரது தந்தையின் வேலை காரணமாக இவரது குடும்பம் கொல்கத்தாவின் செட்லாவில் குடியேறியது. இவரது குடும்பம் இசைக் குடும்பமாகும். இவரது தந்தை பண்டித மோகினிமோகன் மிசுரா மற்றும் மூத்த சகோதரர் முராரிமோகன் மிசுரா இருவரும் பிரபல பாடகர்கள் ஆவர். இவரது குடும்பப் பெயர் பந்தோபாத்யாய் (பானர்ஜி) என்பதாகும். பின்னர் இவரது குடும்பத்திற்கு 'மிசுரா' என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவரது தந்தைக்கு 'காசி சங்கித் சமாஜ்' சார்பில் 'பண்டித', 'சங்கித்ரத்னா', 'சங்கித்நாயக்' ஆகிய பட்டங்களும் வழங்கப்பட்டன.

பணி[தொகு]

இசையமைப்பாளர் பாலக்ருஷ்ண தாஸ் 1960-ல் ஸ்ரீ லோகநாத் என்ற ஒடியா திரைப்படத்தில் முதன்முறையாகப் பாடல் ஒன்றைப் பாடும் வாய்ப்பை மிசுராவிற்குக் கொடுத்தார்.[2] இவர் பாடிய சில வெற்றி ஒடியா திரைப்படங்கள் சில: ஸ்ட்ரீ, கா, மலஜன்ஹா, அபினெத்ரீ, அனுதாப், கீ காஹாரா, அமதா பாதா, மற்றும் ஆதினா மேகா.[2][3]

விருது[தொகு]

  • பாலக்ருஷ்ண தாசு விருது [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tollywood mourns the demise of eminent singer Nirmala Mishra". Entertainment Times. Archived from the original on 31 July 2022. பார்க்கப்பட்ட நாள் 31 July 2022.
  2. 2.0 2.1 "'Nida Bhara Raati Madhu Jhara Janha' Singer Nirmala Mishra Passes Away". https://odishabytes.com/nida-bhara-raati-madhu-jhara-janha-singer-nirmala-mishra-passes-away/. 
  3. "The Telegraph – Calcutta (Kolkata) | Orissa | Odia nightingale mesmerises crowd". telegraphindia.com. 2012. Archived from the original on 31 January 2018. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012. a huge collection of songs in the Oriya film industry with films like Sri Lokanath, Ka, Shree, Jeeban Sathi, Kie Kahara, Nabajanma, Adina Megha, Bandhana, Sansara, Amar Prema, Anutapa, Manikajodi, Dharitri, Chilika Teere and Gharabahuda
  4. "Other States / Orissa News : Balakrushna Dash Samman for Nirmala Mishra". தி இந்து. 2011. Archived from the original on 14 July 2014. பார்க்கப்பட்ட நாள் 6 July 2012. Nirmala Mishra has been chosen for the Sangeet Sudhakar Balakrushna Dash Samman

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_மிசுரா&oldid=3741868" இலிருந்து மீள்விக்கப்பட்டது