நிர்மலா செரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிர்மலா செரோன்
Nirmala Sheoran
Nirmala Sheron (cropped).jpg
2017
தனித் தகவல்கள்
பிறந்த நாள்15 சூலை 1995 (1995-07-15) (அகவை 26)
பிறந்த இடம்பிவானி மாவட்டம், அரியானா,இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)400 மீட்டர்
சாதனைகளும் பட்டங்களும்
தன்னுடைய சிறப்பானவை400m: 51.48s (ஐதராபாத்து 2016)

நிர்மலா செரோன் (Nirmala Sheoran ) ஓர் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கணை ஆவார். 1995 ஆம் ஆண்டு சூலை மாதம் 15 இல் பிறந்த [1] நிர்மலா செரோன் 400 மீட்டர் ஓட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்கிறார். 2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டப்போட்டி மற்றும் 400 மீட்டர் ஓட்டப் போட்டி ஆகிய இரண்டு பந்தயங்களில் இந்தியாவின் சார்பில் ஓடுவதற்கு இவர் தகுதி பெற்றார்.

சூலை 2016 இல் ஐதராபாத்தில் நடைபெற்ற மாநிலங்களிடையிலான தேசிய முதுநிலை தடகளச் சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இவர் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதற்கான தகுதியைப் பெற்றார். இப்போட்டியில் இவர் 400 மீட்டர் தொலைவை 51.48 வினாடிகளில் ஓடி முடித்தார். இதுவே செரோனுடைய தனிப்பட்ட முறையிலான சிறப்பு சாதனையாகும். ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்காக நியமிக்கப்பட்டிருந்த 52.20 வினாடிகள் நேரத்தைவிட இவ்வேகம் மேம்பட்ட வேகமாகும். முன்னதாக 2014 இல் நடைபெற்ற ஒரு போட்டியில் எம்.ஆர். பூவம்மா 51.73 வினாடிகளில் ஓடியதே இந்திய சாதனையாக இருந்தது. அதே போட்டியில் நிர்மலா செரோன் 52.35 வினாடிகளில் ஓடியிருந்தார். இவ்வோட்டம் 2013 இல் சென்னையில் நடைபெற்ற போட்டியில் அவர் ஓடிய 53.94 வினாடிகளை விட மேம்பட்ட ஓட்டமாகும் [2][3].

செரோன் 2016 இரியோடி செனிரோ ஒலிம்பிக் போட்டியில் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் ஓடவும் தகுதி பெற்றார். செரோனுடன் அணில்டா தாமசு, எம்.ஆர். பூவம்மா, டின்ட்டு லூக்கா ஆகியோர் மகளிர் 4 × 400 மீட்டர் பந்தயப் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் ஓடுவதற்காக இந்திய அணி சார்பில் தகுதி பெற்றனர். சூலை 2016 இல் பெங்களுரில் நடைபெற்ற போட்டியில் பந்தய தூரத்தை இவர்கள் 3:27.88 நிமிடத்தில் கடந்து இத்தகுதியைப் பெற்றனர். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் 16 அணிகளுக்குள் 12 ஆவது சிறந்த அணியாகக் இந்திய அணி கருதப்பட்டது [4][5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மலா_செரோன்&oldid=2720332" இருந்து மீள்விக்கப்பட்டது