நிர்பையா நிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிர்பையா நிதியின் கீழ் தோற்றுவிக்கப்பட்ட இலக்னோ மையம் அனைத்துலக பெண்கள் நாளில் குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்ற காட்சி, 2019

நிர்பையா நிதி (Nirbhaya Fund) என்பது 2013ஆம் ஆண்டு இந்திய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட இந்திய ரூபாயில் 1000 கோடியில் தோற்றுவிக்கப்பட்ட மூலதான நிதியாகும். இத்திட்டத்தினை அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இந்தியாவின் மாண்பைப் பாதுகாக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முயற்சிகளை ஆதரிக்கவும் தோற்றுவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். அச்சமின்றி எனப் பொருள்படும் ”நிர்பையா” என்பது 2012ஆம் ஆண்டு இந்தியத் தலைநகர் தில்லியில் பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்ட புனைபெயர் ஆகும். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பிற அமைச்சகங்களுடன் இணைந்து இந்த நிதியினைத் திரட்ட செய்து தோற்றுவிக்கப்பட்டதாகும். வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவாக மையத்தை நிறுவுவதும் இந்நிதியத்தின் பயன்பாடு ஆகும்.

தோற்றம்[தொகு]

நிர்பையா நிதி குறித்த அறிவிப்பினை இந்திய நிதி அமைச்சர் 2013ஆம் நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். இந்த நிதியில் அரசின் பங்களிப்பாக ரூபாய் 1000 கோடி[1] இந்தியப் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் தம்மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டது. இந்த நிதியினை இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை நிர்வகிக்கின்றது.[2][3]

நிதிப் பயன்பாடு[தொகு]

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த இந்த நிதியைப் பயன்படுத்த பல்வேறு அமைச்சகங்கள் திட்டங்களை முன்மொழிந்தன. தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் ஆகியவை முன்மொழிவுகளைச் சமர்ப்பித்த சில அமைச்சகங்கள் ஆகும். உள்துறை அமைச்சகம், நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் ரூ. 194.44 கோடியினை இலக்னோவுக்கான பாதுகாப்பான நகரத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.[4]

ராய்ப்பூரில் உள்ள சாகி மையம் 2017ஆம் ஆண்டு செய்த சேவைக்கான விருதினை அனைத்துலக பெண்கள் நாளில் விருது பெற்ற காட்சி

நவம்பர் 2013இல், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் நிர்பையா நிதி மூலம் புதிய திட்டங்களை முன்மொழிந்து செயல்படுத்துமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டது. பெண்களுக்கு பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு முறையினை செயல்படுத்தாத மாநிலங்கள் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் புதிய பேருந்துகளின் ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்ள அமைச்சகம் அறிவித்தது.[5][6][7]

இந்த நிதியின் மூலம் நாடு முழுவதும் “சாகி” எனப்படும் பெண்களின் பிரச்சனைகளுக்கான ஒற்றைத் தீர்வு மையங்கள் உருவாக்கப்பட்டன.[8] இம்மையங்களில், வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும் இம்மையத்தினை தோற்றுவிக்க முன்மொழியப்பட்டு 2013இல் பரிந்துரைக்கப்பட்டது.[9] இதன் மூலம் தோற்றுவிக்கப்பட்ட ராய்ப்பூர் மற்றும் இலக்னோ மையங்கள் முறையே 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அனைத்துலக பெண்கள் நாளன்று நாரி சக்தி விருதுகளைப் பெற்றது. பெண்களை மேம்படுத்துவதில் இம்மையங்கள் ஆற்றிய பணிக்காக இந்த விருது வழங்கப்பட்டது.[10]

நிதிப் பயன்பாட்டு நிலை[தொகு]

நிர்பயா நிதியின் கீழ் திட்டங்களைச் செயல்படுத்தும் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் நிதியை ஓதுக்கீட்டிற்குக் குறைவாகவே பயன்படுத்தியுள்ளன. கிடைக்கப்பெற்ற சமீபத்திய தரவுகளின்படி, நிதி பயன்பாட்டு விகிதம் 79% முதல் (உள்துறை அமைச்சகம்) 0% சதவிகிதம் வரை (நீதித்துறை) உள்ளதாக அறியப்படுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 91.3% விகிதமாகவும் தண்டனை விகிதம் 22.2% உள்ளன. 1,023 விரைவு நீதிமன்றங்கள் நிர்பயா நிதியின் கீழ், ரூபாய் 767 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ் மாநிலங்களின் நிதி பயன்பாடு மந்த நிலையில் இருப்பதால் இந்த நீதிமன்றங்களின் செயல்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.[11]

தமிழக நிதிப்பயன்பாடு[தொகு]

கடந்த நான்கு ஆண்டுகளில் (2016-2020) நிர்பையா நிதியின் கீழ் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ .190 கோடியாகும். இதில் ரூ .6 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டது. சென்னை காவல்துறை, சென்னை மாநகராட்சி, சமூக நலத்துறை மற்றும் பெருநகர போக்குவரத்து ஆகியவை இந்நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட அமைப்புகளாகும்.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. (26 April 2013). "Nirbhaya Fund". செய்திக் குறிப்பு.
  2. "Nirbhaya Fund". 13 December 2013. பார்க்கப்பட்ட நாள் 30 March 2014.
  3. "Uttar Pradesh: Centre approves Rs 194.44 crore Safe City Project for Lucknow". 1 November 2018.
  4. "Three Proposals of Different Ministries Approved in-Principle by the Ministry of Finance to Utilise the Resources in the Nirbhaya Fund to Enhance the Safety and Security of Women". 16 December 2013. பார்க்கப்பட்ட நாள் 30 March 2014.
  5. Ramachandran, Smriti Kak (24 November 2013). "No new buses if there is no safety for women: Centre". The Hindu. https://www.thehindu.com/news/national/no-new-buses-if-there-is-no-safety-for-women-centre/article5384011.ece. 
  6. "Nirbhaya Fund of Rs1,000 crore for women's safety announced". DNA India. 28 February 2013. http://www.dnaindia.com/india/report_nirbhaya-fund-of-rs1000-crore-for-women-s-safety-announced_1805651. 
  7. "Budget 2013 announces Nirbhaya Fund for women's safety". business today.. 1 March 2013. http://businesstoday.intoday.in/story/budget-2013-announces-nirbhaya-fund-for-women-safety/1/192984.html. 
  8. "One Stop Centre Scheme - M.I.C.S. IAS LUCKNOW". M.I.C.S. IAS LUCKNOW (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-06. Archived from the original on 2021-02-27. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
  9. "One Stop Centre Scheme" (PDF). Ministry of Women and Child Development.{{cite web}}: CS1 maint: url-status (link)
  10. "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-11.
  11. https://scroll.in/article/987314/nirbhaya-fund-could-help-improve-womens-safety-but-money-allotted-for-schemes-is-underutilised
  12. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2021/apr/23/tn-used-only-rs-4586-crore-under-nirbhaya-fund-state-tells-madras-hc-2293545.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்பையா_நிதி&oldid=3560746" இலிருந்து மீள்விக்கப்பட்டது