நிர்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிர்பை
வகை இடை துர, அனைத்து காலநிலை, சீர்வேக ஏவுகணையாகும் [1][2]
அமைக்கப்பட்ட நாடு  இந்தியா
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர் இந்திய ராணுவம்
இந்தியக் கடற்படை
இந்திய விமானப்படை
உற்பத்தி வரலாறு
தயாரிப்பாளர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
உருவாக்கியது 2013 (எதிர்பார்ப்பு)
அளவீடுகள்
எடை 1,000 கிலோ[3]
நீளம் 6 மீட்டர்
விட்டம் 0.52 மீட்டர்

இயந்திரம் சுழல்விசை விசிறி
இறக்கை அகலம் 2.84 மீட்டர்
இயங்கு தூரம்
1,000 கிலோமீட்டர்[1][3]
வேகம் 0.8 மாக்கெண்
வழிகாட்டி
ஒருங்கியம்
INS

நிர்பை (சமசுகிருதம்: निर्भय, Nirbhay, "பயமில்லா") ஒரு குறைஒலிச் சீர்வேக ஏவுகணையாகும். இது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் உருவாக்கப்படும் சீர்வேக ஏவுகணையாகும்.


வரலாறு[தொகு]

நிர்பை ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் விமான மேம்பாட்டு நிறுவனம் இணைந்து உருவாக்குக்கின்றன. இதன் உருவாக்கம் 2007 ஆம் ஆண்டு அதிகாரபூர்வமாக தொடங்கியது. ஆனால் இது 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இவ்வகையில் இது இந்தியாவின் முதல் ஏவுகணையாகும். முதலில் இது தரையில் இருந்து ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்டது. பின் இதை தரை, கடல் மற்றும் வானில் இருந்து ஏவும் வகையில் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இந்தவகை கண்டரிவது கடினம். அமெரிக்காவின் டொமகாக் ஏவுகணை இவ்வகையை சார்ந்தது. சீர்வேக ஏவுகணைகளின் தயாரிப்பு செலவு குறைவு மற்றும் இதை அதிக அளவு குறைவான நேரத்தில் தயாரிக்கலாம் போன்ற காரணங்களால் இந்தியா இந்தவகை ஏவுகணையை உருவாக்க தொடங்கியது.

அமைப்பு[தொகு]

நிர்பை ஏவுகணை இரு நிலைகளை கொண்டுள்ளது. முதல் நிலையில் திட உக்கியும், இரண்டாம் நிலையில் சுழல்விசை விசிறியும் அமைந்துள்ளது. ஏவுகணையை ஏவும் பொழுது திட உக்கி இதை உந்தி மேலே கொண்டு செல்லும். பின் முதல் நிலை பிரிந்து இரண்டாம் நிலை இயக்கத்துக்கு வரும். அப்பொழுது அதன் இறகு விரிக்கப்பட்டு ஏவுகணை கட்டுபடுத்தப்படும். முதல் நிலை பிரிந்த பின் இரண்டாம் நிலையில் உள்ள சுழல்விசை விசிறி உந்தி செல்ல ஏவுகணைக்கு சக்தி அளிக்கும். இது மர உயர அளவு உயரத்தில் பறந்து சென்று எதிரியின் இழக்கை தாக்கி அழிக்கவல்லது.

உருவாக்கம்[தொகு]

சோதனை[தொகு]

ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்தில் இருந்து மார்ச் 12 ஆம் தேதி பிற்பகல் 11.50 மணியளவில் தரையில் இருந்து செலுத்த கூடிய ஏவுகணை ஏவிப்பட்டது. அதன் அடிப்படை இலக்குகளை வெற்றிகரமாக எட்டிய ஏவுகணை 20 நிமிட பயணப்பாதையைத் தாண்டிய நிலையில் அதன் ஏவு பாதையில் இருந்து விலகியது. அதனால் சோதனை முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏவுகனையில் முதல் நிலை மற்றும் இறக்கை விரிப்பு ஆகிய அடிப்படை நூட்பங்களில் வெற்றிகரமாக செயல்பட்டன.[4]

அடுத்த சோதனை 2013 நவம்பர் மாதம் திட்டமிடப்பட்டுள்ள்து.


மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்பை&oldid=1513121" இருந்து மீள்விக்கப்பட்டது