நிர்பயா வாகினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிர்பயா வாகினி என்பது பெண்கள் நலனுக்கான ஒரு இயக்கமாகும். இந்த இயக்கமானது ஒடிசாவைச் சேர்ந்த மகளிர் சமூக சேவகரான மானசி பிரதான் என்பவர் நிறுவிய மகளிர் மாண்பிற்கான தேசிய பிரச்சாரத்தின்( HWNC ) ஒரு தன்னார்வப் பிரிவு ஆகும்.[1] இது ஜனவரி 2014 இல் ஒடிசாவுடன் சேர்ந்து மேலும் ஏழு மாநிலங்களில் நிறுவப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவது நிர்பயா வாகினியின் முக்கிய பங்காகும். மேலும், இந்த இயக்கமானது பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளுக்கான மக்களின் பொதுக் கருத்தை அணிதிரட்டுவதற்கும் இயக்கத்தின் நான்கு-புள்ளி சாசனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொடர்ச்சியான பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கும் உதவும். [2] [3] அதன் நான்கு அம்ச கோரிக்கைகளை உடனடியாக செயல்படுத்த மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதும் அதன் பணியில் அடங்கும்.

திசம்பர் 16, 2012[4][5] அன்று, இந்தியாவின் தலைநகர் தில்லியில் இயங்குனர் மருத்துவம்[6] பயிலும் மாணவி அவரது ஆண் நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு இரவு 9.30[6] மணியளவில் வீடு திரும்பும் போது ஆறு நபர்களால் பேருந்து ஒன்றில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். பாலியல் வன்கொடுமையால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு உடல்நிலை மோசமானதால், அவரை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அனுப்ப மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால் சிகிச்சைகள் பலனளிக்காமல் 2012, திசம்பர் 29 அன்று அவர் உயிரிழந்தார்.[7][8][9] பாதிக்கப்பட்ட அப் பெண்ணின் உண்மையான பெயரைக் குறிப்பிடாமல் டாமினி, நிர்பயா, அமானத் எனும் புனைப்பெயர்களால் அவர் குறிக்கப்பட்டார்.[10][11]. இவரின் பெயர் சோதி சிங் என்று இவரது தாயார் 2015 டிசம்பர் 16 அன்று அளித்த ஒரு பேட்டியில் அறியப்பட்டது.[12]இது பின்னாளில் நிர்பயா சம்பவம் என்று அழைக்கப்பட்டது.

தில்லியில் நடந்த நிர்பயா சம்பவத்தின் [13] முதல் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் 2013 இல் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 29 வரை இரண்டு வார காலம் மகளிர் மாண்பிற்கான தேசிய பிரச்சாரத்தின்( HWNC ) இயக்கத்தால் நிர்பயா வாரமாக அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக டிசம்பர் 24 ஆம் தேதி நிர்பயா வாகினி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னத்தின் முதல் தோற்றம் மும்பையில் வெளியிடப்பட்டது. மேலும், எட்டு மாநிலங்களுடன், டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களிலும் இந்த இயக்கம் தொடங்கப்பட திட்டமிடப்பட்டது.[14].

தன்னார்வலர்கள்[தொகு]

நிர்பயா வாகினி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களைக் கொண்டது . இந்த இயக்கத்தின் தன்னார்வலர்களாகப் பணிபுரியும் பெண்கள், இல்லத்தரசிகள் முதல் மாணவர்கள் வரை உள்ளனர். [15]

நான்கு புள்ளி சாசனம்[தொகு]

மதுபான வர்த்தகத்தில் முழுமையான கட்டுப்பாடு. அதாவது, மதுபான வர்த்தகத்தை அதன் தற்போதைய மட்டத்தில் பாதியாகக் குறைத்தல். [14]
பள்ளி மற்றும் கல்லூரி மட்டங்களில் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு தற்காப்பு பயிற்சி.[14]
ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு தற்காப்புப் பயிற்சியைச் சேர்ப்பது, பெண்கள் பாதுகாப்புக்கு சிறப்பு பாதுகாப்பு படை அமைப்பது.[14]
ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு சிறப்பு விரைவான நீதிமன்றங்களைத் திறத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரித்தல் சிறப்பு விசாரணை மற்றும் தனித்தனி வழக்கு விசாரணைப் பிரிவு [14]

இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது உறுதிசெய்யப்பட்டவுடன், நிர்வாக, நீதித்துறை மற்றும் காவல் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அடுத்த கட்டத்திற்குச் செல்லுதல் என இதன் பணிகள் தொடரவுள்ளன[2]

குறிப்புகள்[தொகு]

 1. "12" (in ENGLISH) (book) (2018 ). CHATTISGARH: Neha Goyal. 30-May (published 30-May-2018). பக். 57. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5447-1895-7. 
 2. 2.0 2.1 "Nirbhaya Vahini to fight violence against women in Odisha". Dailypioneer.com. 7 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
 3. "Archived copy". 2016-08-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-07-02 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 4. Mandhana & Trivedi 2012.
 5. HT 2012a.
 6. 6.0 6.1 Sikdar, Shubhomoy (23 December 2012). "Delhi gang-rape: victim narrates the tale of horror". The Hindu. http://www.thehindu.com/news/national/delhi-gangrape-victim-narrates-the-tale-of-horror/article4230038.ece. பார்த்த நாள்: 24 December 2012. 
 7. PTI 1.
 8. PTI 2.
 9. http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121226_rapewoman.shtml
 10. Roy, Sandip (24 December 2012). "Why does media want to give Delhi gangrape victim a name – Page 1 | Firstpost". M.firstpost.com. 2012-12-26 அன்று பார்க்கப்பட்டது.
 11. IANS 4.
 12. My daughter’s name was Jyoti Singh. Not ashamed to name her: Nirbhaya’s mother
 13. "Three-pronged Strategy to Curb Crime Against Women". Newindianexpress.com.
 14. 14.0 14.1 14.2 14.3 14.4 "Three-pronged Strategy to Curb Crime Against Women", The New Indian Express, 2019-12-15 அன்று பார்க்கப்பட்டது
 15. "Key Three Strategies to Curb Violence Against Women". Dailypioneer.com. 7 March 2019 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்பயா_வாகினி&oldid=2876149" இருந்து மீள்விக்கப்பட்டது