உள்ளடக்கத்துக்குச் செல்

நிருபமா இராஜேந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிருபமா இராஜேந்திரன்
இணையம்http://www.abhinavadancecompany.com/

நிருபமா மற்றும் இராஜேந்திரன் (Nirupama and Rajendra), இந்திய பாரம்பரிய பரதநாட்டியம் மற்றும் கதக் நடனக் கலைஞர்கள் ஆவர். இவர்கள் இந்திய மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த பெங்களூருவில் வசிக்கின்றனர். [1] [2] [3]

வாழ்க்கை மற்றும் வேலை

[தொகு]

புகழ்பெற்ற குருவாகவும் மற்றும் புகழ்பெற்ற நடன இயக்குனர்களாகவும் விளங்குகின்ற முனைவர் மாயா ராவ், பத்மபூசண் விருது பெற்ற குமுதினி லக்கியா, இந்தியாவைச் சேர்ந்த பண்டிதரான அர்ஜுன் மிஸ்ரா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த நஹித் சித்திகி ஆகியோரின் கீழ் கதக் நடனம் மற்றும் பாரம்பரிய பரதநாட்டிய நடன அமைப்பில் இவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்து வருகின்றனர்.

நிருபமா, மறைந்த தனது குரு, திருமதி நர்மதாவின் கீழ் பயிற்சி பெற்ற பாரதநாட்டியத்தை தீவிரமாகப் பின்தொடர்கிறார். இவர் குரு கலாநிதி நாராயணின் கீழ் அபிநயாவில் பயிற்சி பெற்றவர் மற்றும் டாக்டர் பத்மா சுப்பிரமணியத்தின் மூத்த சீடரான திருமதி சுந்தரி சந்தானத்தின் கீழ் நாட்டிய சாஸ்திர சொற்களஞ்சியங்கள் குறித்து தீவிர ஆய்வு செய்துள்ளார். தற்போது, நிருபமா முனைவர் பத்மா சுப்பிரமணியத்தின் உதவியுடன் மார்கி நுட்பங்களை ஆராய்கிறார்.

ஆழ்ந்த இந்திய பாரம்பரிய நடனம் முதல் சமகாலத்திய நடனம் வரை அசாதாரணமான படைப்பு வெளிப்பாடுகளைக் கொண்ட நடனப் படைப்புகளை நிருபமா மற்றும் ராஜேந்திரன் நடனமாடி தயாரித்துள்ளனர். இவர்கள் இருவராகவும் மற்றும் இவர்களது நிறுவனம் மூலமாகவும், இந்தியா முழுவதிலும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். மேலும், ஐந்து நாடுகளிலும் நிரம்பிய பார்வையாளர்களுக்காக விரிவாகப் பயணம் செய்துள்ளனர். மேடை நிகழ்ச்சிகளின் மூலம் இவர்கள் மட்டும் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளனர். [4]

நிருபமா மற்றும் இராஜேந்திரன் ஆகியோர் அபினவா என்கிற நடன நிறுவனத்தை நடத்துகின்றனர். அங்கு இவர்கள் பரதநாட்டியம் மற்றும் கதக் ஆகியவற்றைக் கற்பிப்பதோடு மட்டும் அல்லாமல், பாரம்பரிய நடன வடிவங்களை உலகனைத்தும் பரப்ப வேலை செய்கின்றனர். [5] [6] இவர்கள் நடனப் படைப்புகளைத் தயாரித்து இயக்குகிறார்கள். மேலும் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவின் பல நகரங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். [7] [8] [9] [10] [11] [12] இவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடனத்தில் பணியாற்றியுள்ளனர். இந்திய தேசிய தொலைக்காட்சியில் மிக உயர்ந்த கலைஞர்களின் மதிப்பீட்டான "முதல் தர " மதிப்பீட்டை இவர்கள் பெற்றுள்ளனர். [13] [14]

நிகழ்ச்சிகள் மற்றும் மதிப்புரைகள்

[தொகு]
2013 ஆம் ஆண்டில் பெங்களூரின் சவுதியா நினைவு மண்டபத்தில் நிருபமா இராஜேந்திரனின் ஓஜாஸ் நடன நிகழ்ச்சி

நிருபமா மற்றும் இராஜேந்திரன், 2010 ஆம் ஆண்டில், அபிநவா நிறுவனத்தின் மூலமாக "ஓஜாஸ்" என்ற பெயரில் ஒரு நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினார்கள். இது "வீரியம்" என்று பொருள்படும் சமசுகிருத வார்த்தையாகும். இதை சென்னையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண கான சபா மற்றும் பெங்களூரில் உள்ள சவுதியா நினைவு மண்டபம் தொகுத்து வழங்கின. தி இந்துவில் தெரிவிக்கப்பட்டபடி, இது இரண்டு மணி நேர நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. வழக்கத்திற்கு மாறாக கதக் நடனத்தை மென்மையாய் நடனமாடலுடன் சிறப்பாக தயாரித்தது. [15] தி ஜாய் கிவிங் வாரத்தின் ஒரு பகுதியாக, இவர்கள் ஒரு சமூக காரணத்திற்காக பெங்களூரில் உள்ள எஸ்ஏபி ஆய்வகங்களில் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். [16] மேலும், பாகவதம் திருவிழாவிலும், சென்னையில் உள்ள பாரதீய வித்யா பவனிலும் கதக் நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளனர். [17] [18]

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

[தொகு]

1998 ஆம் ஆண்டில், நிருபமாவுக்கு நாட்டிய மயூரி என்றும், இராஜேந்திரனுக்கு நாட்டிய மயூரா என்றும் அரசாங்கத்தால் பட்டம் வழங்கப்பட்டது. இவர்களின் நடன சிறப்பிற்காக, [19] 2011 ஆம் ஆண்டில், இருவருக்கும் இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் பங்களித்ததற்காக கர்நாடக மாநில அரசு விருது மற்றும் கர்நாடக கலாஸ்ரீ விருது போன்றவை கர்நாடக அரசால் வழங்கப்பட்டது. [20] 2013 ஆம் ஆண்டில், பெங்களூரில் உள்ள ரவீந்திர கலாசேத்திரத்தில் நடனக் கலைஞர் யு.எஸ். கிருஷ்ணராவ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடத்தப்பட்ட நடன விழாவான மகா மாயாவில் நிருபமா மற்றும் இராஜேந்திரன் ஆகியோரின் பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். [21]

குறிப்புகள்

[தொகு]
  1. "About Nirupama Rajendra". thiraseela.com. Archived from the original on 2013-12-02. Retrieved 2013-09-18.
  2. "CREATIVE EXPRESSIONS-About Dancers Nirupama and Rajendra". www.thehindu.com. Archived from the original on 2013-12-02. Retrieved 2013-09-18.
  3. "Two Classicists in Perfect Company". www.thehindu.com. Retrieved 2013-10-18.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-02. Retrieved 2020-02-15.
  5. "Rajendra and Nirupama at their dance studio". bangalore.citizenmatters.in. Retrieved 2013-09-18.
  6. "Abhinava Dance Company in Bangalore". wikimapia.org. Retrieved 2013-10-23.
  7. "Nirupama and Rajendra give Indian dance performance in Florida, USA". articles.orlandosentinel.com. Archived from the original on 2013-12-03. Retrieved 2013-09-18.
  8. "Poetry In Motion: Nirupama & Rajendra Performance in Boston, USA". www.lokvani.com. Retrieved 2013-09-18.
  9. "Performance for Navika 2013-2nd Kannada Summit in Boston, USA". www.navika.org. Archived from the original on 2013-10-16. Retrieved 2013-10-18.
  10. "International Performances". www.kemmannu.com. Retrieved 2013-09-18.
  11. "Dance at The Lowry, Salford Quays, Manchester, England". www.thelowry.com. Retrieved 2013-09-18.
  12. "Nirupama Rajendra show in Canada". www.cbc.ca. Retrieved 2013-10-23.
  13. "A TOP Rating" (PDF). www.sapaf.org. Archived from the original (PDF) on 2013-12-03. Retrieved 2013-10-18.
  14. "Rating held by the artists". www.azindia.com. Archived from the original on 2013-09-19. Retrieved 2013-10-18.
  15. "Feast for the eyes, Ojas-Kathak Performance Review". www.hindu.com. Archived from the original on 2010-07-13. Retrieved 2013-09-18.
  16. "Dance for a Cause". newindianexpress.com. Retrieved 2013-10-18.
  17. "Performance by Nirupama Rajendra & Abhinava at Bhagavatam festival". www.hindu.com. Archived from the original on 2013-12-15. Retrieved 2013-09-18.
  18. "Nirupama rajendra Dance performance in Vidya Bhavan, Chennai". www.narthaki.com. Retrieved 2013-11-22.
  19. "Titled Natya Mayuri & Natya Mayura". bangalore.citizenmatters.in. Retrieved 2013-10-18.
  20. "Kalashree Award Winners Nirupama Rajendrs". articles.timesofindia.indiatimes.com. Retrieved 2013-10-18.[தொடர்பிழந்த இணைப்பு]
  21. "Award for the dancing duo Nirupama Rajendra at Maha Maya". www.narthaki.com. Retrieved 2013-09-18.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nirupama Rajendra
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருபமா_இராஜேந்திரன்&oldid=4075575" இலிருந்து மீள்விக்கப்பட்டது