நிருத்யா பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிருத்யா பிள்ளை (Nrithya Pillai) என்பவர் தென்னிந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பரதநாட்டியக் கலைஞர், ஆசிரியர். பரதக்கலைக்குள் இருக்கும் சாதியப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு போன்றவற்றிற்கு எதிராகவும், இக்கலையைப் பரம்பரை பரம்பரையாக போற்றி நிகழ்த்தி வந்த இசை வேளாளர் சமுதாயத்திடம் இருந்து பறிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு சாதியினரின் ஆதிக்கத்திற்குள் கொண்டு வரப்பட்டதில் உள்ள அரசியலுக்கு எதிராகவும் குரல் கொடுப்பவராக உள்ளார்.[1] [2]

பரத நாட்டியத்தில் புகழ்பெற்ற நட்டுவனாரான சுவாமிமலை கே. ராஜரத்தினத்தின் பேத்தி நிருத்யா பிள்ளை. இவரின் தாத்தா பிறருக்கு பரதநாட்டியத்தை கற்பிப்பதைப் பார்த்தே இவர் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டார். இவரது வீட்டில் மேல்தட்டு வர்கத்தைச் சேர்ந்த பல பெண்கள் நாட்டியம் கற்றுவந்த நிலையில் இவரது சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களுக்கு சமுதாயக் காரணங்களால் அது மறுக்கப்பட்டதாக குறிப்பிடுகிறார். தங்கள் கைளில் இருந்து பறிக்கபட்ட தங்கள் பாரம்பரிய கலையை மீட்கவேண்டும் என்று போராடி வருகிறார். இவர் 2009 முதல் தன் மாணவர்களுக்கு பரத நாட்டியப் பயிற்ச்சி அளித்து வருகிறார்.

2019 இல் சென்னை கிருஷ்ண காண சபாவில் நடந்த நாட்டிய கலா கருத்தரங்கில் பேசிய இவர், கலைக்குள் இருக்கும் சாதியப் பாகுபாடு, பாலினப் பாகுபாடு, சமூக அந்தஸ்த்து போன்வற்றிற்கு எதிராக பேசினார். இதற்கு இவரது தாத்தாவிடம் நடனம் பயின்றவர்களாலேயே கோபம், நஞ்சு, கசப்பான நபர் என்று விமர்ச்சிக்கப்பட்டார்.[3]

பரத நாட்டியம் தங்கள் சமுதாயத்தின் கைளில் இருந்து பறிபோன பிறகு சமசுகிருதமயமாக்கலுக்கு உள்ளாகிவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்.[4]

குறிப்புகள்[தொகு]

  1. "ஆடுவதே அரசியல் செயல்பாடுதான்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
  2. "Nrithya Pillai". Economic and Political Weekly (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
  3. "'தேவதாசி' பற்றிய ஒரு முழுமையான புரிதல் இல்லை – நிருத்யா பிள்ளை". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
  4. Pillai, Nrithya (2019-02-14). "Nrithya Pillai on renaming Bharatanatyam pieces". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2023-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருத்யா_பிள்ளை&oldid=3634724" இலிருந்து மீள்விக்கப்பட்டது