நிராமய தேவர் நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிராமய தேவர் நூல் என்பது நிராமய தேவர் என்பவரால் இயற்றப்பட்டது. நூலின் பெயர் தெரியாமையால் இந்த நூல் ஆசிரியர் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உரை காட்டும் நூல்களில் ஒன்று. இது ஒரு வேதாந்த நூல். [1]

இந்த நூல் வெள்ளியம்பலத் தம்பிரான் எழுதிய ஞானாவரண விளக்கவுரையில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது. இந்த நூலில் 50 வேதாந்திகளின் பெயர்கள் 50 பாடல்களில் சுட்டப்பட்டுள்ளன. பாடல்கள் பல்வகை விருத்தங்களாலும், சந்த விருத்தங்களாலும் ஆனவை. இந்த நூல் இன்று கிடைப்பதாகத் தெரியவில்லை.

பாடல் - எடுத்துக்காட்டு [2][தொகு]

1

உரூ உணர்வு இறந்திட்டு ஊமன் கண்டது ஓர் கனவே ஒப்பத்
தெரிதரும் உணர்விற்கு ஏற்பச் செய்யும் ஆறு ஒன்று இன்றி
உரை உணர்வு இழந்த நட்டத்து உற்றிடும் மனத்தான் அந்தத்
திரிதரு பழுது இல் பேரானந்தமே சேர்ந்தது அன்றே.

2

ஆதலால் ஞானமான அனுபவம் தேயத் தான
நீதிலாப் பாழும் ஞாதிரு ஞேயமாம் சிவமும் சென்றல்
தோதொணா மூன்றினோடும்உரை உணர்வு இழந்த நட்டத்து
ஆதி ஆகும் அனுபூதியது முத்தி ஆகும்

3

சீவன்-முத்தி, பர-முத்தி, சிவமாம்-முத்தி சொரூபத்தில்
தோவு-முத்தி மேலான சொரூப நான்கோடு உறும் முத்தி
நீதி முத்திரையின் முத்தி நீடு ஆனந்த முத்தியுடன்
ஓது முத்தி ஒருபதுமே வேதாந்தத்தால் உறு முத்தி.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 287. 
  2. பொருள் நோக்கில் சொற்பிரிப்பு செய்யப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிராமய_தேவர்_நூல்&oldid=1451525" இலிருந்து மீள்விக்கப்பட்டது