நிரல் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிரல் (ನಿರಲ್, பொருள்:நிழல்) என்பது 2013 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட துளுத் திரைப்படமாகும். இதை ரஞ்சித் பாஜ்பே இயக்கியுள்ளார். சோதன் பிரசாத், சன் பூஜாரி ஆகியோர் கூட்டாகத் தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன.

கதை[தொகு]

சச்சின், ராஷ்மி, தீப்தி ஆகிய மூவர் கதையின் முதன்மை கதாப்பாத்திரங்கள். சச்சின், துபாயில் உள்ள பொறியாளராகப் பணிபுரிகிறான். திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுடன் வாழ்கின்றான். ராஷ்மி, துபாயில் உள்ள வங்கியில் பணிபுரியும் பெண். தீப்தி, சச்சினின் உறவுக்காரப் பெண். மூவருக்கும் உள்ள தொடர்பையும், அவர்களது விருப்பங்கள் நிறைவேறியனவா என்பதையும் தெரிவிக்கின்றது.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரல்_(திரைப்படம்)&oldid=2705857" இருந்து மீள்விக்கப்பட்டது