நிரஞ்சன் பகத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிரஞ்சன் பகத்

அகமதாபாத்தில் உள்ள தனது குடியிருப்பில் பகத், 2005
தொழில் கவிஞர், கட்டுரையாளர், விமர்சகர், தொகுப்பாசிரியர்
நாடு இந்தியன்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
குஜராத்தி சாஹியாட்டா - பூர்வர்தா உத்தர்தா
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
சாகித்திய அகாதமி விருது (1999)
கையொப்பம் Niranjan Bhagat Gujarati author Signature.svg
அதிகாரப்பூர்வ இணையதளம்

நிரஞ்சன் நர்ஹரி பகத் (18 மே 1926 - 1 பிப்ரவரி 2018) [1] இந்திய குஜராத்தி மொழி கவிஞரும் வர்ணனையாளரும் ஆவார். இவர் குஜராத்தி சாஹியாட்டா - பூர்வர்தா உத்தர்தா என்ற விமர்சனப் பணிகளுக்காக குஜராத்தி மொழிக்கான சாகித்ய அகாடமி விருதை 1999 ஆம் ஆண்டில் வென்றவர் ஆவார். இவர் ஒரு ஆங்கிலக் கவிஞராகவும் இருந்தார். மேலும், ஆங்கிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியிருந்தார். அவற்றில் பெரும்பாலானவை, கீதாஞ்சலியின் பாணியில் எழுதப்பட்டவை. [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

நிரஞ்சன் நர்ஹரி பகத் 1926 ஆம் ஆண்டு மே 18 அன்று அகமதாபாத்தில் பிறந்தார்.[3] அவர் 1950 ஆம் ஆண்டில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தார். [4]

தொழில்[தொகு]

1971 ஆம் ஆண்டில் சுனிலால் மடியாவின் மகன் அமிதாப் மடியாவுடன் நிரஞ்சன் பகத்

பகத் எல்.டி கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். பின்னர் அவர் அகமதாபாத்தில் உள்ள செயிண்ட் சேவியர் கல்லூரியில் 1975 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பேராசிரியராக சேர்ந்தார். பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை அங்கு பணியாற்றினார். [5] 1997-98 ஆம் ஆண்டு முதல் குஜராத்தி சாகித்ய பரிஷத்தின் தலைவராக பணியாற்றினார். 1963 முதல் 1967 வரை டெல்லியில் உள்ள சாகித்திய அகாதமி, குஜராத்தி ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.

குஜராத்தி சாஹிய்தா - பூர்வர்தா உத்தர்தா என்ற விமர்சனப் படைப்பிற்காக 1999 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றார். இவர், சண்டோலே என்ற தனது படைப்பிற்காக நர்மத் சுவர்ண சந்த்ரக் என்ற விருதினைப் பெற்றார். [4] இவர் 1949 ஆம் ஆண்டில் குமார் சுவர்ண சந்திரக் விருதினையும், 1969 ஆம் ஆண்டில் ரஞ்சித்ரம் சுவர்ண சந்திரக் என்ற விருதினையும், 1998 ஆம் ஆண்டில் பிரேமானந்த் சுவர்ண சந்திரக் விருதினையும், 2000 ஆம் ஆண்டில் சச்சிதானந்த் சன்மன் விருதினையும் மற்றும் 2001 ஆம் ஆண்டில் நர்சிங் மேத்தா விருதினையும் பெற்றார். [6]

இறப்பு[தொகு]

பகத் 1 பிப்ரவரி 2018 அன்று அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது 91 ஆவது வயதில் பக்கவாதத்தால் இறந்தார். [4]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரஞ்சன்_பகத்&oldid=2897705" இருந்து மீள்விக்கப்பட்டது