நிரஞ்சன் நாத் வாஞ்சூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரஞ்சன் நாத் வாஞ்சூ
இந்தியக் குடிமைப் பணி
5வது மத்தியப் பிரதேச ஆளுநர்
பதவியில்
14 அக்டோபர் 1977 – 17 ஆகத்து 1978
முதலமைச்சர் கைலாஷ் சந்திர ஜோஜி
வீரேந்திர குமார் சக்லெச்சா
முன்னவர் சத்யா நாராயண் சின்ஹா
பின்வந்தவர் செ. மு. பூஞ்சா
தனிநபர் தகவல்
பிறப்பு (1910-05-01)1 மே 1910
சத்னா, பிரித்தானிய இந்தியா
இறப்பு 20 அக்டோபர் 1982(1982-10-20) (அகவை 72)
குடியுரிமை இந்தியா
தேசியம் இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள் கிங் கல்லூரி, கேம்பிரிச்சு
பணி அரசியல்வாதி

நிரஞ்சன் நாத் வாஞ்சூ (N. N. Wanchoo)(வான்சு என்றும் உச்சரிக்கப்படுகிறது)[1] (1 மே 1910 - 20 அக்டோபர் 1982) என்பவர் ஓர் மூத்த அரசு ஊழியர் மற்றும் இந்தியாவில் கேரளா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களின் ஆளுநராக இருந்தவர் ஆவார். இவர் தனது ஆரம்பக் கல்வியினை மத்தியப் பிரதேசத்தின் நவ்காங்கில் (1916-ஜூலை 1920) முடித்தார். லாகூரில் உள்ள அரசு கல்லூரி மற்றும் கேம்பிரிச்சு கிங்ஸ் கல்லூரி [2] மற்றும் இங்கிலாந்து ராயல் பாதுகாப்புக் கல்லூரியில் கல்லூரிக் கல்வியினை முடித்தார்.[1]

பொது பணியாளர்[தொகு]

வாஞ்சு 1934-ல் இந்தியக் குடிமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகாரில் துணை-ஆட்சியராகப் தனது பணியைத் தொடங்கினார். இவரது பணியின் போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும், பாதுகாப்பு உற்பத்தியின் தலைமைக் கட்டுப்பாட்டாளராகவும் (1948-57), இந்திய அரசின் செயலாளராகவும், செலவினத் துறை, நிதி அமைச்சகம் (1960-61) ஆகிய பதவிகளில் பணியாற்றினார். பொகாரோ எஃகு ஆலையின் தலைவர் (1965-70) [2] மற்றும் இந்திய அரசாங்கத்தின் செயலாளர், தொழில்துறை மேம்பாட்டுத் துறை (1968-70)யிலும் பணியாற்றியுள்ளார். ஐதராபாத்தில் உள்ள இந்திய நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் ஆளுநர் நீதிமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1972-ல் தொழில்துறை சுங்க மற்றும் விலைகள் பணியகத்தின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.

ஆளுநர்[தொகு]

இவர் 1 ஏப்ரல் 1973 முதல் அக்டோபர் 10, 1977 வரை கேரள ஆளுநராக முதல்வர்களான சி. அச்சுத மேனன், கே. கருணாகரன் மற்றும் அ. கு. ஆன்டனி ஆகியோருடன் பணியாற்றினார்[3] பின்னர் 14 அக்டோபர் 1977 முதல் 16 ஆகத்து 1978 வரை மத்தியப் பிரதேச ஆளுநராகப் பணியாற்றினார் . கைலாஷ் சந்திர ஜோஷி மற்றும் வீரேந்திர குமார் சக்லேச்சா ஆகியோர் இக்காலத்தில் முதல்வர்களாகப் பணியாற்றினர்.[4]

பிறபணிகள்[தொகு]

இந்தியாவில் பின்தங்கிய பகுதிகளுக்கான தொழில்துறை மேம்பாடு மற்றும் இந்த பகுதிகளில் உள்ள தொழில்களுக்கு நிதி மற்றும் நிதி ஊக்குவிப்புகளைப் பரிந்துரைப்பதற்கான ஒரு குழுவின் தலைவராகத் திட்டக்குழு இவரை நியமித்தது. வான்சூ குழு, சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, நிதி மற்றும் நிதி ஆதாரங்களைச் செலவழித்து வளர்ச்சித் துருவங்களாக மாற்றுவதற்குப் பரிந்துரைத்தது. அனைத்து பின்தங்கிய பகுதிகளிலும் வளங்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்தவும் பரிந்துரைத்தது. இவர் 1982-ல் தில்லி நகர்ப்புற கலை ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார்.[5] இவர் 20 அக்டோபர் 1982-ல் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரஞ்சன்_நாத்_வாஞ்சூ&oldid=3777371" இருந்து மீள்விக்கப்பட்டது