நியோபியம்-ஜெர்மானியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியோபியம் -ஜெர்மானியம் (Nb3Ge) என்பது நியோபியம் (Nb) மற்றும் ஜெர்மானியம் (Ge) ஆகியவற்றின் இடைநிலை வேதிச் சேர்மம் ஆகும். இது A15 கட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

இது 23.2 K என்ற நிலைமாறு வெப்பநிலையுடன் கூடிய ஒரு மீக்கடத்துதிறன் கொண்ட கடத்தி ஆகும்.

4.2 கெல்வின் வெப்பநிலையில் 37 டெஸ்லாக்களுக்கு மேலான உயர் நிலைமாறு களங்களில் (உயர் காந்தப்புல அடர்த்தி கொண்ட களங்கள்) சிதறிய படலங்களைக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.[1]

வரலாறு[தொகு]

1973 ஆம் ஆண்டில் Nb3Ge ஒரு மீக்கடத்தியாக கண்டுபிடிக்கப்பட்டது [2] மற்றும் 13 ஆண்டுகளாக (1986 ஆம் ஆண்டில் குப்ரேட் மீக்கடத்திகளைக் கண்டுபிடிக்கும் வரை) இது மிக உயர்ந்த நிலைமாறு வெப்பநிலையைக் கொண்ட சாதனையைப் பெற்றது. [3]

நியோபியம்-டின் அல்லது நியோபியம்-டைட்டானியம் போன்ற மீக்கடத்தும் கண்ணாடிகளின் பயன்பாடுகளுக்கு இது பரவலாக பயன்படுத்தப்படவில்லை.

தொடர்புடைய உலோகக்கலவைகள்[தொகு]

நியோபியம்-ஜெர்மானியம்-அலுமினியம் சுமார் 10 டெஸ்லாக்களின் மேல் முக்கியமான புலத்தைக் கொண்டுள்ளது.[4]

குறிப்புகள்[தொகு]

  1. Oya, Gin-ichiro; E. J. Saur (1979). "Preparation of Nb3Ge films by chemical transport reaction and their critical properties". Journal of Low Temperature Physics 34 (5–6): 569–583. doi:10.1007/BF00114941. Bibcode: 1979JLTP...34..569O. http://www.springerlink.com/content/vxl533x085p02128/fulltext.pdf?page=1. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Physics Today". American Institute of Physics. October 1973. Archived from the original on 2013-04-15.
  3. "Superconducting devices". TheFreeDictionary. பார்க்கப்பட்ட நாள் 2008-09-06.
  4. Sinha, P. K.. Electromagnetic Suspension: Dynamics & Control. The Institution of Engineering and Technology. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86341-063-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோபியம்-ஜெர்மானியம்&oldid=3218546" இலிருந்து மீள்விக்கப்பட்டது