உள்ளடக்கத்துக்குச் செல்

நியோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியோகம் (Niyoga) (சமசுகிருதம்: नियोग), என்பது பண்டைய காலத்தில் பாரத கண்டத்தில் பின்பற்றப்பட்ட ஒரு இந்து சமயத்தின் ஒரு நடைமுறையாகும். குழந்தை இல்லாத விதவைகள் அல்லது மனைவிகள் வேறொரு ஆணுடன், குறிப்பாக கணவனின் தம்பி அல்லது அண்ணன் மூலம் குழந்தை பெறுவதற்கு நியோகம் எனும் முறை அனுமதிக்கிறது.[1][2][3] குடும்ப வம்சாவளியின் தொடர்ச்சியை உறுதி செய்வதும், குழந்தை இல்லாத விதவை சமூகத்தில் எதிர்கொள்ளும் நிதி மற்றும் சமூக நிச்சயமற்ற தன்மையைக் குறைப்பதும் நியோக முறையின் நோக்கமாகும்.[4] பிரகஸ்பதி சூத்திரங்கள் மற்றும் மனுதரும சாத்திரங்களில் கலியுகத்தில் நியோக முறை தடைசெய்யப்பட்டடுள்ளது.[5] நியோகம் பலதார திருமணத்திற்கு ஒத்ததல்ல என்று கூறப்படுகிறது.[6] நியோகம் என்பது யூதர்களின் லேவியர்களின் வம்சத்தவர்களின் திருமணத்தில்,[7] (ஒரு சகோதரனின் விதவைக்கு மகன் இல்லையென்றால் அவளை திருமணம் செய்து கொள்ளும் எபிரேய நடைமுறை) பிந்தைய காலத்தைச் சேர்ந்தது என்று சர் ஹென்றி மைனே கருதுகிறார், ஆனால் ஜே. டி. மேனே ஒரு லெவிரேய ஆணின் மரணத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்த நியோகாவின் விரிவாக்கப்பட்ட வடிவமாக நியாயப்படுத்தினார்.[8] நியோக நடைமுறையானது, ஒரு பெண் விரும்பத்தக்க வித்து கொண்ட ஆணுடன் இணைவதன் மூலம் குழந்தைகளைப் பெற உதவியது.[9]

நியோகம் நடைமுறையை மனுதரும சாத்திரத்தின்அத்தியாயம் IX.59-63ல் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு விதவை அல்லது நோயாளி கணவனின் மனைவி நியோகம் நடைமுறை மூலம் குழந்தை பெறும் முறை IX.64-68ல் கூறப்பட்டுள்ளது. நியோக நடைமுறைப்படி பிறந்த மகனுனை க்ஷேத்திரகன் என்று அழைக்கப்படுவார் என மனுஸ்மிருதியில் அத்தியாயம் IX.167 சொல்லப்பட்டிருக்கிறது.[10]

மனுஸ்மிருதி

[தொகு]

மனுதரும சாத்திரத்தில், நியோகம் குறித்து IX.59-63ல் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை IX.64-68ல் அனுமதிக்கப்படுகிறது. நியோகத்தால் ) பிறக்கும் குழந்தையை சேத்திராஜன் (IX.167) பிரிவில் வைக்கப்படுகிறது.

நியோகத்தின் உட்பிரிவுகள்

[தொகு]

நியோக நடைமுறையில் பல்வேறு உட்பிரிவுகள் இருந்தன:

  1. குழந்தையில்லாத விதவை/விதவைகள் அல்லது குழந்தை இல்லாத நோயாளி கணவனின் மனைவி/மனைவிகள் மட்டுமே குழந்தை பெறுவதற்காக நியாகம் நடைமுறையை கடைப்பிடிக்க அனுதிக்கப்படுவர்; பாலியல் இன்பத்திற்காக அல்ல.[11]
  2. நியோக நடைமுறையில் பிறக்கும் குழந்தை கணவன்-மனைவியின் குழந்தையாகக் கருதப்படும், நியோகத்திற்காக நியமிக்கப்பட்ட ஆணின் குழந்தையாகக் கருதப்படாது.
  3. நியோகம் மகப்பேறு நோக்கத்திற்காக மட்டுமே அனுமதிக்கப்படுகிறது; பாலியல் இன்பத்திற்காக அல்ல.
  4. நியமிக்கப்பட்ட ஆண் எதிர்காலத்தில் இந்தக் குழந்தையுடன் எந்த தந்தைவழி உறவையோ அல்லது பற்றுதலையோ தேட மாட்டார்.
  5. தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க, ஒரு ஆண் தனது வாழ்நாளில் அதிகபட்சம் மூன்று முறை இந்த வழியில் நியமிக்கப்பட அனுமதிக்கப்படுவார்.
  6. அந்தச் செயல் தர்மத்தின் செயலாகக் கருதப்படும், அவ்வாறு செய்யும்போது, கணவன் மனைவி இருவரின் மனதில் தருமம் மட்டுமே இருக்கும். காமம் இருக்காது. கடவுளின் பெயரால் ஆண் பெண்ணுக்கு உதவி செய்வான். அதே சமயம் பெண் தனக்கும் தன் கணவனுக்கும் குழந்தையைப் பெற்றெடுக்க மட்டுமே அதை ஏற்றுக்கொள்வாள்.[12]
  7. மேலும் கலவியின் போது உடலுடன் எந்த விதமான முன்விளையாட்டு அல்லது தொடர்பும் இருக்காது. பெண் மற்றும் ஆண் இருவரின் உடல்களும் நெய் பூசப்பட்டிருக்கும். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஒரு திரை போடப்பட்டிருக்கும். இதனால் யாரும் ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்க்க முடியாது. இதனால் அவர்களின் மனதில் மோகம் ஏற்படாது. பெண்ணின் கால்கள் மட்டுமே மூடப்படாமல் இருக்கும். ஆண் பெண்ணின் யோனிப் பகுதியின் உள்ளே ஊடுருவி விந்து வெளியேற்றியதுடன் நியோகம் செயல்முறை முடிவடைகிறது.

நடைமுறை

[தொகு]

நியோகத்தை விரும்பும் குழந்தையில்லாத ஒரு விதவை அல்லது குழந்தையில்லாத நோயாளியின் மனைவி இறைச்சி, தேன் போன்றவற்றைத் தவிர்த்து, ஒரு ஆண்டிற்கு மிகாமல் தரையில் தூங்க வேண்டும் என்று போதாயனர் மற்றும் வசிட்டர் கூறுகின்றனர். கணவர் இறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவள் தனது இறந்த கணவனுக்கு இறுதிச் சடங்கு செய்து, தனது சகோதரர் அல்லது தந்தை, கணவரின் பிற உறவினர்கள் மற்றும் குடும்பத்தின் புரோகிதர் ஒப்புதலுடனும், உதவியுடனும், தனக்கு விருப்பமானவரைத் தேர்ந்தெடுக்கிறார்.

குணமற்ற, பைத்தியக்கார, நோய்வாய்ப்பட்ட அல்லது மிகவும் வயதான விதவைக்கு நியோகா உரிமை இல்லை. பருவம் அடைந்த பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நியோகாவிற்கு சரியான நேரம் எனக்கருதப்படுகிறது.

வரம்புகள்

[தொகு]

நியோக நடைமுறை மனுவால் அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் நான்கு உலக யுகங்களின் (யுகங்கள்) படிப்படியாக சீரழிந்து வருவதால் அவரால் கலியுகத்தில் நியோக முறை தடைசெய்யப்பட்டது.

எடுத்துக்காட்டுகள்

[தொகு]

இதிகாச கால எடுத்துக்காட்டு

[தொகு]

மகாபாரத இதிகாசத்தில் சத்தியவதியின் மகனான விசித்திரவீரியன் இறப்பிற்குப்பிற்குப் பின், சத்தியவதி-பராசரருக்குப் பிறந்த வியாசர் மூலம், குழந்தையில்லாத தனது மருமகள்களான அம்பிகா மற்றும் அம்பாலிகா ஆகியோர் திருதராட்டிரன் மற்றும் பாண்டுவையும் பெற்றெடுத்தனர். மூன்றாவதாக வியாசருக்கும்-பணிப்பெண்னுக்கும் விதுரன் பிறந்தான்.[13]

வரலாற்றுக் கால எடுத்துக்காட்டு

[தொகு]

வாரிசு இல்லாத ஹைஹைய இராச்சிய மன்னர் ராஜ் சிங் (கிபி 1689–1712) புரோகிதர்களின் ஆலோசனைப்படி, நியோக முறையில் குழந்தை பெற்றுக் கொண்டார்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Thomas P. (1924). Kama Kalpa Or The Hindu R itual Of Love. p. 21.
  2. Walker, Benjamin (2019). Hindu World: An Encyclopedic Survey of Hinduism. Vol. 1. Taylor & Francis. p. 592. ISBN 978-0-429-62465-0. The levirate system of the ancient Jews was almost identical with the Hindu custom of niyoga, 'injunction', legalized by Manu
  3. Mishra, V. B. (1977). "The Practice of Niyoga in Ancient Literature of India: A Sociological Study". Annals of the Bhandarkar Oriental Research Institute 58/59: 773–776. பன்னாட்டுத் தர தொடர் எண்:0378-1143. https://www.jstor.org/stable/41691747.
  4. Brick, D. (2023). "Widow Remarriage and Niyoga". Widows Under Hindu Law. Oxford University Press. pp. 15–101. doi:10.1093/oso/9780197664544.003.0002.
  5. Kane, Pandurang Kane (1941). History Of Dharmasastra Vol. 2, Part. 1. p. 29. Niyoga forbidden in the Kali age by Brhaspati and other smrti writers.
  6. Sarkar, S. C. (1928). Some Aspects Of The Earliest Social History Of India. p. 78. It has been held that 'niyoga' has nothing to do with polyandry.
  7. Levirate marriage
  8. Starcke, Carl Nicolai (1889). The primitive family in its origin and development. University of Michigan. New York, D. Appleton and company. p. 144. Sir Henry Maine thinks that the Niyoga is of later date than the Levirate, but J. D. Mayne justified in regarding the Levirate as merely an enlarged form of the Niyoga, which came into effect after a man's death.
  9. Bhyrappa, S. L. (1979). Parva. p. 822. The Niyoga system, which enabled a woman to choose and invite a male with the desirable seed, and bear children.
  10. Bühler, George (1886). "Chapter IX". The Laws of Manu. Sacred Books of the East. Vol. 25.
  11. "The Laws of Manu IX". www.sacred-texts.com. Retrieved 2016-03-16.
  12. "नियोग और हिन्दू धर्म ग्रन्थ niyog in hinduism - Vedic Press". Archived from the original on 2017-07-23.
  13. SECTION CVI Sambhava Parva
  14. P.L. Mishra (1969). "Mohansingh (The Last Kalachuri King)". Proceedings of the Indian History Congress 31: 207.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியோகம்&oldid=4486907" இலிருந்து மீள்விக்கப்பட்டது