நியூ கலிடோனியன் காகம்
| நியூ கலிடோனியன் காகம் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | விலங்கு |
| தொகுதி: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கோர்விடே |
| பேரினம்: | காகம் (வகை) |
| இனம்: | C. moneduloides |
| இருசொற் பெயரீடு | |
| Corvus moneduloides Lesson, 1831 | |
நியூ கலிடோனியன் காகம் ( New Caledonian crow ) என்பது நியூ கலிடோனியாவை பூர்வீகமாகக் கொண்ட காகக் குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான ஒரு காகமாகும். இதன் தனித்துவமான கரையும் ஒலியின் காரணமாக இந்தப் பறவை பெரும்பாலும் 'குவா-குவா' என்று அழைக்கப்படுகிறது. இது பல வகையான முதுகெலும்பிலி உயிரினங்கள், முட்டைகள், குஞ்சுகள், சிறிய பாலூட்டிகள், நத்தைகள், கொட்டைகள், விதைகள் உட்பட பல்வேறு வகையான உணவுகளை உண்ணும். நியூ கலிடோனியன் காகம் புழுக்களை பிடித்துண்ணும். சிலசமயங்களில் புழுக்கள் மரப்பட்டைப் பிளவுகள் ஒளிந்திருக்கும். அப்போது ஒரு சிறிய குச்சியை எடுத்து அதை வளைத்து கொக்கி போன்று ஆக்கும். பின்னர் அந்த கொக்கியை மரப்பட்டைக்குள் விட்டு புழுவை வெளியே எடுத்துச் சாப்பிடும். இந்த உணவு உண்ணும் முறையானது நியூ கலிடோனியன் காகம் கருவிகளைப் பயன்படுத்தும் திறன் கொண்டது என்பதைக் குறிக்கிறது.[2] இந்த இனம் பல அதிநவீன அறிவாற்றல் சோதனைகளின் முடிவில் இது புத்திசாலித்தனமான பறவை என்பது கண்டுபிடிக்கபட்டது.[3][4][5] இந்த கண்டுபிடிப்புகளின் விளைவாக, நுண்ணறிவின் பரிணாம வளர்ச்சியில் கருவி பயன்பாடு மற்றும் உற்பத்தியின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அறிவியலாளர்களுக்கு நியூ கலிடோனியன் காகம் ஒரு மாதிரி இனமாக உள்ளது.
விளக்கம்
[தொகு]நியூ கலிடோனியன் காகம் ஒரு நடுத்தர அளவிலான காகம் ( 40 சென்டிமீட்டர்கள் (16 அங்) நீளத்தில் , வீட்டுக் காகத்தைப் போன்றது. ஆனால் சற்று மெல்லிய தோற்றம் கொண்டது. இந்தப் பறவை முழுவதும் கருப்பு நிறத்தில் காணப்படும். நல்ல வெளிச்சத்தில் இதன் இறகுகுகள் ஊதா, அடர் நீலம், சிறிது பச்சை நிற பளபளப்பைக் கொண்டிருக்கும். அலகு, பாதங்கள், கால்கள் அனைத்தும் கரிய நிறத்தில் இருக்கும். அலகு மிதமான அளவில் உள்ளது, ஆனால் கீழ் தாடையின் நுனி மேல்நோக்கி சாய்ந்து வித்தியாசமாக இருக்கும். இதனால் ஓரளவு உளி போன்ற தோற்றத்தைக் கொண்டதாக காணப்படுகிறது. ஒரு கருவியை நேராகப் பிடிக்க வேண்டிய தேவையின் காரணமாக இந்த அலகின் அமைப்பு பரிணாமம் பெற்றதாகக் கூறப்படுகிறது.[6]
இந்தப் பறவையின் குரல் மென்மையான "வா-வா" அல்லது "வாக்-வாக்" என்றும், சில சமயங்களில் கரகரப்பான "குவா-குவா" அல்லது "வார்க்" என்றும் உள்ளதாக விவரிக்கப்படுகிறது. நியூ கலிடோனியா முழுவதும், இந்தப் பறவையின் தனித்துவமான கரையும் ஒலியின் காரணமாக இது பெரும்பாலும் 'குவா-குவா' என்று குறிப்பிடப்படுகிறது.
பரவலும் வாழ்விடமும்
[தொகு]இந்தப் பறவை பசிபிக் பெருங்கடலில் உள்ள நியூ கலிடோனியா தீவுகளைச் சேர்ந்தது. இது முதன்மை காடுகளில் வாழ்கிறது. இது பிரதான தீவான கிராண்டே டெர்ரே மற்றும் லாயல்டி தீவுகளில் ஒன்றான மேரே தீவில் மட்டுமே வாழ்கிறது.
சூழலியலும் நடத்தையும்
[தொகு]நியூ கலிடோனியன் காகம் பல்வேறு வகையான உணவுகளை உண்ணும், அவற்றில் பல வகையான பூச்சிகள், முதுகெலும்பில்லாத உயிரினங்கள் (பறக்கும் பூசிகளை மிகுந்த சுறுசுறுப்புடன் பிடிக்கும், இரவில் பறக்கும் பூச்சிகளை அந்தி வேளையில் பிடிக்கும்), முட்டைகள், குஞ்சுகள், சிறிய பாலூட்டிகள், நத்தைகள் (அவற்றை உயரத்திலிருந்து கடினமான கற்கள் மீது போடுகின்றன), பல்வேறு கொட்டைகள், விதைகள் போன்றவற்றை உண்கின்றன.
இந்த இனம், விரிசல்கள், பிளவுகளில் போன்றவற்றில் மறைந்திருக்கும் இரையைப் பிடிக்க, குச்சி, இலை போன்றவற்றில் கருவிகளை உருவாக்குவதற்குப் பெயர் பெற்றது. இந்தக் கருவிகள் இயற்கையாகவே உள்ள முட்களாளக இருக்கலாம். சில சமயங்களில் இப்பறவை கொக்கிகளை செய்கின்றன. இந்தக் கொக்கியை கருவியாக கொண்டு மரக்கட்டை அல்லது மரப்பட்டையில் உள்ள விரிசல் அல்லது இடுக்கில் விட்டு புழுக்களைப் பிடித்து உண்கிறது. இந்த வழியில் பிடிக்கப்படும் புழுக்கள் காகங்களின் உணவின் முக்கிய பகுதியாக உள்ளது.[7] கலாபகோசுத் தீவுகளில் மரங்கொத்திகள் மற்றும் மரங்கொத்தி பிஞ்சி ஆகிய பறவைகளின் சுற்றுச்சூழல் இடத்தை நியூ கரோலியன் காகம் இட்டு நிரப்புவதாகத் தெரிகிறது, ஏனெனில் நியூ கலிடோனியாவில் மரங்கொத்திகள் இல்லை.
நியூ கலிடோனிய காகம் தன் கூட்டை மரத்தின் உயரமான இடத்தில் கட்டுகிறது. அதில் பொதுவாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை 2-3 முட்டைகள் இடும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Corvus moneduloides". IUCN Red List of Threatened Species 2018: e.T22705944A131945232. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22705944A131945232.en. https://www.iucnredlist.org/species/22705944/131945232. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Hunt, Gavin R. (January 1996). "Manufacture and use of hook-tools by New Caledonian crows". Nature 379 (6562): 249–251. doi:10.1038/379249a0. Bibcode: 1996Natur.379..249H. https://archive.org/details/sim_nature-uk_1996-01-18_379_6562/page/248.
- ↑ Weir, A.A.S.; Chappell, J.; Kacelnik, A. (2002). "Shaping of hooks in New Caledonian crows". Science 297 (5583): 981. doi:10.1126/science.1073433. பப்மெட்:12169726. https://archive.org/details/sim_science_2002-08-09_297_5583/page/980.
- ↑ Taylor, Alex H.; Hunt, G. R.; Holzhaider, J. C.; Gray, R. D. (September 2007). "Spontaneous metatool use by New Caledonian crows". Current Biology 17 (17): 1504–1507. doi:10.1016/j.cub.2007.07.057. பப்மெட்:17702575. Bibcode: 2007CBio...17.1504T.
- ↑ Wimpenny, Joanna H.; Weir, AAS; Clayton, L; Rutz, C; Kacelnik, A (August 2009). "Cognitive Processes Associated with Sequential Tool Use in New Caledonian Crows". PLOS ONE 4 (8): e6471. doi:10.1371/journal.pone.0006471. பப்மெட்:19654861. Bibcode: 2009PLoSO...4.6471W.
- ↑ Kenward, Benjamin; Rutz, Christian; Weir, Alex A. S.; Chappell, Jackie; Kacelnik, Alex (October 2004). "Morphology and sexual dimorphism of the New Caledonian Crow Corvus moneduloides, with notes on its behaviour and ecology". Ibis 146 (4): 652–660. doi:10.1111/j.1474-919x.2004.00299.x. http://users.ox.ac.uk/~kgroup/publications/pdf/kenward_etal_2004_ibis_morphology.pdf. பார்த்த நாள்: 12 August 2014.
- ↑ Rutz, Christian; Lucas A. Bluff; Nicola Reed; Jolyon Troscianko; Jason Newton; Richard Inger; Alex Kacelnik; Stuart Bearhop (17 September 2010). "The Ecological Significance of Tool Use in New Caledonian Crows". Science 329 (5998): 1523–1526. doi:10.1126/science.1192053. பப்மெட்:20847272. Bibcode: 2010Sci...329.1523R. https://archive.org/details/sim_science_2010-09-17_329_5998/page/1522.