நியூயார்க் மெட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மெட்சு அணியின் தற்கால விளையாட்டரங்கம், சிட்டி பீல்டு

நியூயார்க் மெட்சு (New York Mets) ஐக்கிய அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தின் நியூயார்க் நகர அடிப்பந்தாட்ட அணியாகும். குயின்சின் பிளஷிங் மெடோசு–கோரோனா பூங்காவிலுள்ள சிட்டி பீல்டு இவர்களது தாயக விளையாட்டரங்கமாகும். இந்த அணி முன்னதாக நியூயார்க்கின் சார்பாக விளையாடிய நியூயார்க் ஜெயன்ட்சு மற்றும் புரூக்ளின் டாட்ஜர்சுக்கு மாற்றாக 1962இல் உருவானது. அடிப்பந்தாட்டத்தில் உலக சீரிஸ் கோப்பையை மெட்சு 1969இலும் 1986இலும் வென்றுள்ளனர். இவர்களது வண்ணங்கள் நீலமும் ஆரஞ்சும் ஆகும். இவர்களது பணிநிறைவு விளையாட்டாளர்களின் கீழ்கண்ட சீருடை எண்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன: 42 (ஜாக்கி ராபின்சன்), 41 (டாம் சீவர்), 14 (கில் ஆட்ஜசு), மற்றும் 37 (கேசே இசுடென்கெல்).

"மெட்சு" என்ற பெயர் "மெட்ரோபாலிடன்சு" என்பதன் சுருக்கமாகும். மெட்சு முதலில் தங்கள் ஆட்டங்களை போலோ திடலில் ஆடி வந்தனர். 1964இல் புதிய சியா விளையாட்டரங்கை தங்கள் தாயக திடல் ஆக்கிக்கொண்டனர். 45 பருவங்கள் கழித்து 2009இல் சியாவிற்கு அடுத்ததாக புதிய சிட்டி பீல்டு விளையாட்டரங்கை திறந்தனர். பழைய விளையாட்டரங்கு இடிக்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூயார்க்_மெட்சு&oldid=1727270" இலிருந்து மீள்விக்கப்பட்டது