நியூபியன் ஆடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாயகம் ஆப்பிரிக்காவின் வட கிழக்குப் பகுதியாயினும் அரேபியா, இந்தியாவிலும் காணப்படும். இன ஆடுகளுக்கு நீண்ட கால்களும் உறுதியான உடற்கட்டும் உண்டு. இப்பண்பு ஆடு வளர்ப்போரால் இங்கிலாந்தில் விரும்பப்படுகிறது. இங்கிலாந்தில் ஆடு வளர்ப்போர் 1895ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இன ஆட்டுக்கிடாய்களை ஆப்பிரிக்கா, அரேபியா, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து ஆங்கிலோ நியூபியன் இனத்தினை உருவாக்கினர். பொதுவாக நியூபியன் இனம் (Nubian) என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறது.

நியூபியன் ஆடு

நியூபியன் இனம் மேல்மட்ட ஆடு எனப்படுகிறது. காதுகள் நீண்டு, தலைக்குப் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். நியூபியன் ஆடு கூரான மூக்கும் குட்டை முடியும் கொண்டது. இன ஆடு ஒரே நிறமாகவோ, நிறக்கலவைகளுடனோ காணப்படும். பொதுவாகக் கறுப்பு, சிவப்பு, பழுப்பு நிறங்கள் தனித்தோ வெண்மை கலந்தோ காணப்படும். இனக் கிடாக்களின் மேல் குட்டையான முடிகள் முதுகு, தொடைகளின் மேல் காணப்படும். இவை ஏனைய சுவிட்சர்லாந்து இன ஆடுகளிலும் காணப்படுகின்றன.

நியூபியன் இன ஆடுகளின் மடி பெரியதாகவும், சுவிட்சர்லாந்து இன ஆடுகளின் மடிகளைவிடத் தொங்கலாகவும் காணப்படும். நன்றாக அமைந்த உறுதியாகப் பிணைக்கப்பட்ட மடி சிறப்பிடம் பெறும். வளர்ந்த பெண் ஆடு 30 அங்குல உயரமும் குறைந்தது 135 பவுண்ட் எடையும் கொண்டிருக்கும். கிடாக்கள் 35 அங்குல உயரமும் குறைந்தது 175 பவுண்ட் உடல் எடையும் கொண்டிருக்கும். நியூபியன் இனம் சுவிட்சர்லாந்து இனங்களை விட குறைவான அளவே பால் தரும். எனினும் இதன் பாலில் கொழுப்புச் சத்து மிகுதியாகும்.

[1]

  1. அறிவியல் களஞ்சயம் தொகுதி 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூபியன்_ஆடு&oldid=3891767" இலிருந்து மீள்விக்கப்பட்டது