நியூத்திரன் மட்டுப்படுத்தி
Appearance
நியூத்திரன் மட்டுப்படுத்தி (neutron moderator) என்பது அணுக்கருவியலில், விரைவு நியூத்திரன்களின் வேகத்தைக் மட்டுப்படுத்தி அவற்றை அணு எரிபொருள் கொண்டு ஏற்பட்ட அணுக்கரு தொடர்வினையை தக்கவைக்கக்கூடிய வெப்ப நியூத்திரன்களாக மாற்றும் ஊடகங்களைக் குறிக்கும்.
பொதுவாக பயன்படுத்தப்படும் மட்டுப்படுத்திகள்: சாதாரண (மென்) நீர் (உலகின் ஏறத்தாழ 75% அணுஉலைகளில்), திட கிராஃபைட் (20% அணுஉலைகள்) மற்றும் கன நீர் (5% அணுஉலைகள்).[1] பெரிலியம் சில சோதனை அணுஉலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹைடிரோகார்பன்களும் வாய்ப்புள்ளவைகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மட்டுப்படுத்தி | உலைகள் | வடிவம் | நாடு |
---|---|---|---|
இல்லை (விரைவு) | 1 | பிஎன்-600 | உருசியா (1) |
கிராஃபைட் | 29 | மேம்பட்ட வளிமக் குளிர்வி அணுஉலை (AGR), மாக்னோக்ஸ், RBMK |
ஐக்கிய இராச்சியம் (18), உருசியா (11) |
கன நீர் | 29 | காண்டு | கனடா (17), தென் கொரியா (4), ருமானியா (2), சீனா (2), இந்தியா (2), அர்ஜென்டீனா, பாக்கித்தான் |
மென்னீர் | 359 | PWR, BWR | 27 நாடுகள் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Miller, Jr., George Tyler (2002). Living in the Environment: Principles, Connections, and Solutions (12th Edition). Belmont: The Thomson Corporation. p. 345. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-534-37697-5.