நியூட்டன் கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
E, K, F lie on a common line, the Newton line

யூக்ளீடிய வடிவவியலில் நியூட்டன் கோடு (Newton line) என்பது அதிகபட்சம் இரு இணை பக்கங்களுடைய குவிவு நாற்கரத்தின் இரு மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோடாகும்.[1]

பண்புகள்[தொகு]

  • குவிவு நாற்கரமொன்றின் எதிர்பக்கங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டுகள் இரண்டும் வெட்டிக்கொள்ளும் புள்ளி (K) நியூட்டன் கோட்டின் மீதமையும். மற்றும் இப்புள்ளி, நாற்கரத்தின் மூலைவிட்டங்களின் நடுப்புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு EF ஐ இருசமக்கூறிடும்.[1]
  • ABCD நாற்கரத்தின் நியூட்டன் கோட்டின் உட்புள்ளி P பின்வரும் பண்புடையது:

இதில் [ABP] என்பது ABP முக்கோணத்தின் பரப்பளவைக் குறிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Claudi Alsina, Roger B. Nelsen: Charming Proofs: A Journey Into Elegant Mathematics. MAA, 2010, ISBN 9780883853481, pp. 108–109 (கூகுள் புத்தகங்களில் online copy)
  2. Dušan Djukić, Vladimir Janković, Ivan Matić, Nikola Petrović, The IMO Compendium, Springer, 2006, p. 15.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூட்டன்_கோடு&oldid=3422694" இருந்து மீள்விக்கப்பட்டது