நியூசெர்சி தமிழ்ப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியூசெர்சி தமிழ்ப் பேரவை
New Jersey Tamil Peravai
சுருக்கம்NJTaP
உருவாக்கம்2019
வகைஇலாப நோக்கமற்ற நிறுவனம்
சேவை பகுதி
வட அமெரிக்கா
வலைத்தளம்njtamilperavai.org

நியூசெர்சி தமிழ்ப் பேரவை (New Jersey Tamil Peravai) அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் செயல்படும் ஒரு தமிழ் அமைப்பு ஆகும்.[1] நியூசெர்சி தமிழ்ப் பேரவை, 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் தொடங்கப்பட்டது.  நியூசெர்சி மாநிலம், அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்றாகும். இம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நியூசெர்சி தமிழர்களுக்கு பொதுவான ஒர் அமைப்பாக, வள்ளுவத்தின் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் உன்னதமான வழியில் செயல்படுவதாக இந்த அமைப்பின் இணையத்தளம் தெரிவிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]