நியாயத் தராசு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியாயத் தராசு
இயக்கம்கே. இராஜேஸ்வர்
தயாரிப்புஎம்.வேதா
திரைக்கதைமு. கருணாநிதி
இசைசங்கர் கணேஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுஜி.பி.கிருஷ்ணா
படத்தொகுப்புபி.வெங்கடேஷ்வர ராவ்
கலையகம்மேனகா பிக்சர்ஸ்
விநியோகம்அருள்நிதி கிரியேஷன்ஸ்
வெளியீடு11 ஆகஸ்ட் 1989
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நியாயத் தராசு (Nyaya Tharasu) என்பது 1989 ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இப்படமானது கே. இராஜேஸ்வர் இயக்குநராக அறிமுகமான திரைப்படமாகும். இப்படத்தில் நிழல்கள் ரவி மற்றும் ராதா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். எம். வேதா தயாரிப்பில் இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் இசையில் 1989 இல் இது வெளியிடப்பட்டது.[1] இப்படம் மலையாள மொழியில் வெளிவந்த "பஞ்சாக்னி" என்ற படத்தின் மறு ஆக்கமாகும்.[2]

கதைச்சுருக்கம்[தொகு]

பரமானந்தம் என்ற நிலக்கிழார் அநியாயமாக ஒரு பழங்குடியினப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவளை கற்பமாக்கிய காரணத்தால் அவனை கொலை செய்து விட்டு மரண தண்டனை அனுபவிக்கும் சிறைத் தண்டனை கைதியும் நக்சல் ஆர்வலருமான பாரதி (ராதா) இரண்டு வார பிணையில் வெளியே வருகிறாள் என்பதிலிருந்து கதை ஆரம்பம் ஆகிறது. பாரதியின் தாய் மரணப்படுக்கையில் இருக்கும் ஒரு முன்னாள் சுதந்திரப் போராளி ஆவார், அவரைப் பார்க்க பாரதி சிறையிலிருந்து விடுவிக்கப்படுகிறாள், இப்போது அவள் சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறாள். பாரதியின் இளைய சகோதரி சாவித்ரி, அவளது கணவன் விஜயசாரதி மற்றும் மருமகன் ஆகியோர் அவள் வீட்டிற்கு திரும்பியதற்காக மகிழ்ச்சியடைகின்றனர். அதே சமயம் அவளது இளைய சகோதரன் போஸ் (சார்லி) போதை மருந்துகளுக்கு அடிமையாகி, ஒரு நல்ல வேலையைத் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் வெட்டியாக ஊர்ச் சுற்றி வரும் இளைஞன் ஆவான். இதற்காக பாரதி அவனை கடிந்து கொள்கிறாள். அவளுடைய தாயின் ஈமச் சடங்கைச் செய்வதற்காக டில்லியிருந்து வீட்டிற்கு வரும் பாரதியின் மூத்த சகோதரர் அவளிடம் பேசக் கூட மறுக்கிறார். இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் தாயாரின் இறுதிச் சடங்குகளைத் தான் செய்யாமல் அவரது மருமகனிடம் சடங்குகளை நடத்திட விழைகிறார். பாரதியின் கல்லூரித் தோழி அமுதாவைத் (குட்டி பத்மினி) தவிர அவளுக்கு அறிமுகமானவர்களில் பெரும்பாலானோர் அவளை மிரட்டுகின்றனர், அமுதா நாகப்பனை (லிவிங்ஸ்டன்) திருமணம் செய்து கொண்டு பாரதியின் வீட்டிற்கு அருகில் வசித்து வருகிறார்.

தாழமுத்து (நிழல்கள் ரவி), நியாயத் தராசு பத்திரிக்கையாளர், பாரதியிடம் ஒரு நேர்காணலைப் பெற முயற்சிக்கிறார், ஆரம்பத்தில் பாரதி மறுக்கிறாள். ஆனாலும் விடாது அவளைத் தொடர்வது கண்டு பாரதி கோபமடைகிறார். நாட்கள் கடந்து செல்லும் போது, பாரதி அங்கு தனது தேவையின்மையை உணர்கிறாள், வாழ்வதற்கான இடம் இதுவல்ல எனவும் முடிவிற்கு வருகிறாள். சில நாட்களில் அமுதாவின் கணவனிடம் பல மாற்றங்கள் ஏற்படுகிறது, அவன் பெண்களை சீரழிக்குபவனாக மாறி விடுகிறான். எனவே பாரதி அவர்களோடு தங்க முடியாமல் போகிறது. இறுதியாக பாரதி, தாழமுத்துவை உதவிக் கேட்டுவிட்டு அவரது இடத்தில் தங்கிக்கொள்கிறார்.

காலப்போக்கில், பாரதி மற்றும் தாழமுத்து ஆகிய இருவருக்கும் இடையே உறவு மலர்கிறது. பாரதியின் பிணை முடிவுக்கு வர இருப்பதால் அவளுக்கு அரசிடமிருந்து மன்னிப்பு பெறுவதற்கு மிகுந்த சிரமப்படுகிறார். இறுதியாக அம்முயற்சியில் வெற்றி பெறுகிறார், பாரதி இனி சிறைக்கு செல்லவேண்டியதில்லை என்பதையறிந்த மிகவும் மகிழ்ச்சியடைந்த சாவித்ரி மற்றும் போஸ் ஆகியோர் பாரதியுடன் சமரசம் செய்து கொள்ள எண்ணுகின்றனர். இந்த நல்ல செய்தியை அமுதாவிடம் பகிர்ந்து கொள்வதற்காக பாரதி அங்கே செல்கிறாள். ஆனால் அங்கு அமுதாவை அவளது கணவர் நாகப்பன் மற்றும் நண்பர்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்து விடுகின்றனர். இதைக் கண்ட பாரதி மிகுந்த கோபம் கொண்டு வேட்டையாடும் துப்பாக்கி மூலம் நாகப்பனை சுட்டுக் கொன்றதுடன், இறுதியில் காவல் நிலையத்தில் சரணடைகிறாள்.

நடிப்பு[தொகு]

தயாரிப்பு[தொகு]

"பன்னீர் புஷ்பங்கள்" (1981), "கடலோரக் கவிதைகள்(1986) மற்றும் "சொல்லத் துடிக்குது மனசு]] (1988). போன்ற படங்களுக்கு கதை எழுதிய கே.ராஜேஸ்வர் இத்திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் மலையாள மொழியில் வெளிவந்த "பஞ்சாக்னி" என்ற படத்தின் மறு ஆக்கமாகும். கலைஞர்.மு.கருணாநிதி இப்படத்தின் திரைக்கதையை எழுதிணார் [3]

இசை[தொகு]

இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ் இசையில் இத்திரைப்படம் வெளிவந்தது.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://tamilrasigan.net/nyaya-tharasu-1989-tamil-movies-online-watch-free/
  2. "Today, even ghosts are cracking jokes". newindianexpress. பார்க்கப்பட்ட நாள் 2017-06-01.
  3. "Archived copy". Archived from the original on 9 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 9 சனவரி 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2019-01-18.
  5. http://tamilthiraipaadal.com/index.php?action=album&id=3109&aname=Nyaaya%20Tharaasu