நியமங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியமங்கள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் 1901 முதல் 1988 வரை தேசிய தரநிர்ணய பிரிவு (NBS) என்றழைக்கப்பட்டு வந்தது. இது ஒரு அமெரிக்காவை சார்ந்த நிறுவனமாகும். இதன் குறிக்கோள் பின்வருமாறு:
"அளவீடு அறிவியல், தரம், மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதின் மூலம் அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்பை அதிகரிக்க, நம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த புத்தாக்கம் மற்றும் தொழில்துறை போட்டித்தன்மையை வளர்க்கும் வகை செய்தல்."