உள்ளடக்கத்துக்குச் செல்

நிம்சோவிட்சு தற்காப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிம்சோவிட்சு தற்காப்பு
Nimzowitsch Defence
abcdefgh
8
a8 black rook
c8 black bishop
d8 black queen
e8 black king
f8 black bishop
g8 black knight
h8 black rook
a7 black pawn
b7 black pawn
c7 black pawn
d7 black pawn
e7 black pawn
f7 black pawn
g7 black pawn
h7 black pawn
c6 black knight
e4 white pawn
a2 white pawn
b2 white pawn
c2 white pawn
d2 white pawn
f2 white pawn
g2 white pawn
h2 white pawn
a1 white rook
b1 white knight
c1 white bishop
d1 white queen
e1 white king
f1 white bishop
g1 white knight
h1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
நகர்வுகள் 1.e4 Nc6
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் பி00
பெயரிடப்பட்டது ஆரோன் நிம்சோவிட்சு
மூலம் ராசாவின் சிப்பாய் ஆட்டம்
Chessgames.com opening explorer

நிம்சோவிட்சு தற்காப்பு (Nimzowitsch Defence) என்பது வழக்கத்திற்கு மாறாக விளையாடப்படும் ஒரு சதுரங்கத் திறப்பு முறையாகும். இத்திறப்பு பின்வரும் நகர்வுகளுடன் தொடங்குகிறது.

1. e4 Nc6

இந்த திறப்பானது ஓர் உயர்நவீன திறப்பு ஆட்டத்திற்கு எடுத்துக்காட்டு ஆகும், இங்கு கருப்பு ஆட்டக்கார்ர் வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடும் ஆட்டக்காரரின் சிப்பாய்களை ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சதுரங்கப் பலகையின் மையத்தை ஆக்கிரமிக்க அனுமதித்து விளையாடுவதைக் குறிக்கிறது.

கருப்பு ஆட்டக்காரரின் நோக்கம் வெள்ளையின் முன்னேற்றத்தை தடுப்பது அல்லது மத்தியிலுள்ள சிப்பாய்களை அடக்குவது அல்லது வெள்ளையை தவறான நகர்த்தல் செய்வதற்கு அனுமதித்து இறுதியில் வெள்ளை சிப்பாய்களின் மையத்தை உடைக்க தனது சொந்த காய்களை முன்னோக்கி நகர்த்த சரியான நேரத்தை நோக்கி காத்திருப்பது, அல்லது சிப்பாய் மையத்தை பாதுகாக்கும் வெள்ளைக் காய்களைத் தாக்குவது போன்ற திட்டங்கள் கருப்பின் நோக்கமாக இருக்கும்.

இத்திறப்பு ஒருபோதும் முழுமையான நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்ளக்கூடிய திறப்பு அல்ல என்று உலக சதுரங்க சாம்பியன் காரி காசுப்பரோவ் மற்றும் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ரேமண்டு கீன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஆயினும்கூட இத்திறப்பு சாதனையாளர்களை உருவாக்கும் திறப்பாகவும், மேலதிக ஆற்றலுடன் எதிராளியின் அனுபவத்தை ஆராய்வதற்கு ஒரு பெரும் வாய்ப்பை வழங்குகிறது என்றும் கருதப்படுகிறது [1].

சதுரங்க திறப்புகளுக்கான கலைக்களஞ்சியம் நிம்சோவிட்சு தற்காப்பு திறப்பை பி00 என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

பிரதான நகர்தல் வரிசை: 2.d4

[தொகு]

மையத்தை நோக்கிய முன்னேற்றத்தை வெள்ளை ஏற்றுக் கொள்கிறது. 2...d5 அல்லது 2...e5. என்ற நகர்வுகள் கருப்பின் முக்கியத் திட்டத்தில் இடம்பெறும் நகர்வுகளாகும்.

2...d5

[தொகு]

இத்திறப்பை உருவாக்கிய ஆரோன் நிம்சோவிட்சு விரும்பும் கருப்பின் இரண்டாவது நகர்வு 2...d5 ஆகும். இதற்கு பதிலளிக்கும் வகையில் வெள்ளை கீழ்கண்ட நகர்வுகளில் ஒன்றைத்தான் விளையாட முடியும்.

  • 3.e5, என்ற வெள்ளையின் நகர்வுக்குப் பதிலாக கருப்பு எப்போதும் 3...Bf5, என்ற நகர்வை விளையாடும். (என்றாலும் 3...f6 என்று நகர்த்துவதும் சரியே ஆனால் இது சிக்கல் நிறைந்த மாறுபாடு ஆகும்) தொடர்ந்து ...e6 நகர்வை விளையாட வேண்டும். (வெள்ளை சதுரங்களில் செல்லும் கருப்பு அமைச்சருக்கு இச்சிப்பாய் நெடு நேரத் தடையை கொடுக்காது) பின்னர் ...f6 மற்றும் ...c5 சிப்பாய்களை நகர்த்தி வெள்ளையின் மைய்ய சிப்பாய்களை தாக்குவதையும் தடுக்காது.
  • 3.exd5 Qxd5, என்று விளையாடி தொடர்ந்து 4.Nf3, நகர்வையும் அடுத்து Nc3 நகர்வையும் செய்து ராணியை தாக்கும் நோக்கில் செயல்படலாம். ஆனால் இதன் மூலம் கருப்பு 4....Bg4 அல்லது 4....e5. என்று விளையாடி வெள்ளையின் மையத்திற்கு அழுத்தத்தைக் கொடுக்கும் வாய்ப்பு உருவாகிறது.
  • 3.Nc3 dxe4 (மாறாக கருப்பு 3...e6 என்று விளையாடினால் அது பிரெஞ்சு தற்காப்பு என்ற திறப்புக்கு நெருக்கமாக சென்றுவிடும்) 4.d5 Ne5, என்று நகர்த்தி தொடர்ந்து வெள்ளை 5.Qd4 or 5.Bf4 Ng6 6.Bg3.என்று ஆட்டத்தைத் தொடரலாம்.

2...e5

[தொகு]

பிரித்தானிய கிராண்டு மாசுட்டர் டோனி மில்சு இந்நகர்த்தலை ஒர் உறுதியான நகர்வு என ஆதரிக்கிறார். 3.Nf3, என்று நகர்த்தி வெள்ளை சிகாட்ச்சு ஆட்டத்திற்கு நிலை மாற்றிக் கொள்ள முடியும். அல்லது 3.d5 Nce7 என்று விளையாடலாம். (3...Nb8 என்றும் கருப்பு விளையாடலாம்). இது வெள்ளைக்கு சிறிய அனுகூலத்தையே கொடுக்கும். 3.dxe5 Nxe5 என்ற நகர்த்தலையும் முயற்சிக்கலாம். இதனால் வெள்ளை அமைப்புநிலை அனுகூலத்தையே எதிர்பார்க்கிறது. 4.Nf3 என்ற சாதாரண நகர்வையோ அல்லது ஆக்ரோசமான ஆனால் வலிமையற்ற 4.f4. என்றும் விளையாடலாம்.

சில தரவுத் தளங்கள் பொதுவாக வெள்ளைக்கான இரண்டாவது நகர்வு 2.Nf3 என்கின்றனmost common move. எதிரியின் திசையில் கோட்பாட்டு ரீதியிலான போருக்கு வெள்ளை ஆட்டக்காரர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை[2].

  • கொலராடோ பலியாட்டம் எனப்படும் கூர்மையான நகர்வு 2...f5 என்ற நகர்வும் சந்தேகத்தையே அளிக்கிறது. அமெரிக்க அனைத்துலக மாசுட்டர் தாவுக் ரூட்டுக்கு இந்நகர்வு சில வெற்றிகளைக் கொடுத்துள்ளது. சமீபத்தில்கூட பின்லாந்தைச் சேர்ந்த அனைத்துலக மாசுட்டர் ஒல்லி சால்மென்சு மற்றும் சிலருக்கு இதேபோல வெற்றிகள் கிடைத்துள்ளன. இந்நகர்வு பல சிக்கல்களைத் தருகிறது. உதாரணமாக, 3.exf5 d5 4.Nh4!? e5!? 5. Qh5+ g6 6.fxg6 Nf6! 7.g7+ Nxh5 8.gxh8=Q Qxh4 9.Qxh7 Nd4, இந்நிலையில் வெள்ளை ஒரு கருப்பு யானையை கைப்பற்றி பலமாக உள்ளது. ஆனால் கருப்பின் காய்கள் அனைத்தும் நன்றாக நகரும் நிலையில் உள்ளன. வெள்ளை ராசா ஆபத்தான நிலையில் உள்ளார். 2000 ஆம் ஆண்டு டொர்ட்மண்டில் நடைபெற்ற போட்டியில் நாயிடிட்சு டோயிட்லிங் இந்த நகர்வுகளைத் தொடர்ந்து 10.Qg6+ Kd8 11.d3 Nf4! 12.Qf7 Bb4+ 13.c3 Bg4! 14.Qg8+ Kd7 15.Qg7+ Kc6 16.g3 Nf3+ 17.Kd1 Nd4+ 18.Kd2 Nf3+ 19.Kd1 Nd4+ ½–½. என்று விளையாடி ஆட்டத்தை சம்நிலையில் முடித்தார். பிரித்தானிய அனைத்துலக மாசுட்டர் கேரி லேன் 4.d4 Bxf5 5.Bb5 (பலவீனமான e5 சதுரத்தை கட்டுக்குள் வைக்கும் முயற்சி) Qd6 6.Ne5 Nf6 7.0-0 Nd7 8.Bxc6 bxc6 9.Qf3! Nxe5 (அல்லது 9...e6 10.g4 Bg6 11.Nxg6 hxg6 12.Bf4 Qb4 13.Qd3) 10.Qxf5 Nf7 11.Bf4 Qd7 12.Qxd7+ Kxd7 13.Nd2. கருப்பின் தரமற்ற சிப்பாய் கட்டமைப்பு வெள்ளைக்கு சிறிது அனுகூலத்தைக் கொடுக்கிறது. 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய குழு சாம்பியன் பட்டப் போட்டியில் சாவ் மற்றும் சால்மென்சு இடையிலான போட்டியில் வெள்ளை வெற்றி பெற்றார்[3].
  • 2...d6, 2...e6, 2...Nf6, 2...d5, and 2...g6 உள்ளிட்ட பிற நகர்த்தல்களும் விளையாடக்கூடியவைகளே ஆகும். ஆனால் ஆட்டமானது பிர்க் தற்காப்பு, பிரெஞ்சு தற்காப்பு, அலெக்கின்சு தற்காப்பு, சிகாண்டிநேவியன் தற்காப்பு, ரோபார்ட்சு தற்காப்பு ஆகிய திறப்புகளை நோக்கி அவை ஆட்டத்தை அழைத்துச் செல்லும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Garry Kasparov and Raymond Keene, Batsford Chess Openings 2, Collier Books, 1989, p. 228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-02-033991-7.
  2. The American International Master Jeremy Silman writes that "most players (even at the grandmaster level) avoid any pre-studied lines by the opponent by simply replying with 2.Nf3". Jeremy Silman, The Reassess Your Chess Workbook: How to Master Chess Imbalances, Siles Press, 2001, p. 383. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-890085-05-7.
  3. "Shaw vs. Salmensuu, EuTCh (2001), Leon ESP". Chessgames.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிம்சோவிட்சு_தற்காப்பு&oldid=2632883" இலிருந்து மீள்விக்கப்பட்டது