நிமிசாம்பா
| நிமிசாம்பா கோயில் | |
|---|---|
நிமிசாம்பா கோயில் | |
| அடிப்படைத் தகவல்கள் | |
| அமைவிடம் | ஸ்ரீரங்கபட்டணம், கருநாடகம்,இந்தியா |
| புவியியல் ஆள்கூறுகள் | 12°25′7.63″N 76°42′38.42″E / 12.4187861°N 76.7106722°E |
| சமயம் | இந்து |
தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின் ஸ்ரீரங்கப்பட்டணத்திலிருந்து சுமார் 2 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள காவேரி ஆற்றின் கரையில் உள்ள ஒரு கோயிலின் பெயர் நிமிசாம்பா ஆகும்



சென்னையில் பிராட்வே பேருந்து நிலையத்தின் பின்புறம் நிமிசாம்பா கோயில் உள்ளது. இது ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ளா நிமிசாம்பாவை ஒத்திருக்கிறது, இது மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வரலாறு
[தொகு]
நிமசாம்பா தேவி, சிவபெருமானின் துணைவியான பார்வதி தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறார். கஞ்சம் ஒரு புனித இடமாகக் கருதப்படுகிறது.
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் மைசூர் அரியணை ஏறிய கி. பி. முதலாம் உடையார் மன்னரின் ஆட்சிக் காலத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக வழக்கமான பூஜை செய்யப்படுகிறது. இந்தக் கோயில்களில் ஒன்று ஓ. டி. சி சாலை காட்டன்பேட்டையிலும் (மெஜஸ்டிக் பெங்களூர் அருகே) அமைந்துள்ளது. மற்றொரு கோயில் பெங்களூரின் ராஜா ராஜேஸ்வரி நகரின் அருகே அமைந்துள்ளது.
விழாக்கள்
[தொகு]ஸ்ரீ சோமவம்ச ஆரிய சத்திரியர்களால் ஆண்டுதோறும் வைசாக சுத்த தசமி நாளில் “நிமிஷாம்பா ஜெயந்தி” திருவிழா கொண்டாடப்படுகிறது. இதே திருவிழாவை ஆரிய வைசியர்கள் “வாசவாம்பா ஜெயந்தி” எனக் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்கள் அம்மனை தரிசிக்கலாம்.
நவராத்திரி காலத்தில் துர்கா ஹோமம், சண்டிகா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. விஜயதசமி நாளில் தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. சிவராத்திரி, யுகாதி மற்றும் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச உணவு வழங்கப்படுகிறது.[1]

போக்குவரத்து
[தொகு]மைசூர் நகரத்தில் இருந்து இங்கு செல்ல பேருந்துச் சேவை உள்ளது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sri Nimishambha Temple, Ganjam, Srirangapatna | Jatra Details". nimishambhatemple.kar.nic.in. Archived from the original on 1 July 2018. Retrieved 2018-07-03.